ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ
🕉️

நினைவு மலர்

Fleur du Souvenir

Memorial Flower

ஜெகதாம்பாள்
செல்வராசா கந்தசாமி

Jegathambaal Selvarajah Kandasamy

1953 — 2026

கொக்குவில் சுடர் - தலையாழித் தங்கம்

Lumière de Kokuvil — Joyau de Thalayaazhi

Light of Kokuvil — Golden Jewel of Thalayaazhi

🔱

🌺 Présentation 🌺

Ce livre commémoratif a été créé en hommage à Madame Jegathambaal Selvarajah Kandasamy, née le 17 octobre 1953 à Kokuvil, Sri Lanka, et décédée le 19 janvier 2026 à Pontoise, France, à l'âge de 72 ans.

Jegathambaal était la troisième enfant d'une famille de neuf frères et sœurs — les « Nava Manigal » (neuf joyaux) — issus d'une famille Vishwabrahmana de Kokuvil, dans le nord du Sri Lanka.

Elle a étudié à l'Université de Peradeniya (1972–1976), où elle a obtenu son diplôme. Elle a épousé Monsieur Selvarajah Kandasamy et ensemble ils ont eu deux filles : Aswini et Sivajini.

La famille a vécu au Sri Lanka, avant de s'établir en France à Pontoise, près de Paris. Jegathambaal était connue pour sa douceur, son hospitalité, et son amour profond pour sa famille.

Ce livre contient des hommages en tamoul de sa famille, de ses frères et sœurs du monde entier, et de ses amis de l'université. Les textes personnels sont en tamoul — la langue du cœur de sa famille.

🕉️ Que son âme repose en paix 🕉️

Om Shanthi Shanthi Shanthi

Intro

🌺 Introduction 🌺

This memorial book has been created in loving memory of Mrs. Jegathambaal Selvarajah Kandasamy, born on 17 October 1953 in Kokuvil, Sri Lanka, and passed away on 19 January 2026 in Pontoise, France, at the age of 72.

Jegathambaal was the third child of a family of nine siblings — the "Nava Manigal" (nine jewels) — from a Vishwabrahmana family of Kokuvil, in northern Sri Lanka. The family has deep roots in goldsmithing and Tamil tradition.

She studied at the University of Peradeniya, Sri Lanka (1972–1976), where she earned her degree. She married Mr. Selvarajah Kandasamy and together they had two beloved daughters: Aswini and Sivajini.

The family lived in Sri Lanka before settling in Pontoise, France. Jegathambaal was known for her warmth, hospitality, gentle nature, and her deep and unconditional love for her family.

This book contains heartfelt tributes in Tamil from her family, siblings from around the world, and university friends. Personal poems and tributes are in Tamil — the language of the heart of her family — with English introductions provided throughout.

🕉️ May her soul rest in eternal peace 🕉️

Om Shanthi Shanthi Shanthi

Intro
🕉️

விநாயகர் துதி

வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குரு மே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா
ஐந்து கரத்தனை யானை முகத்தனை,
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை,
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
ॐ गणपतये नमः
ஓம் கணபதியே நமஹ
1
🔱

சிவபுராணம்

நீல கண்டம் பஞ்ச சண்டம்
பான்மிகு சொற்பதம் ஆயதென்ன
வேல் நிசாசர மார்பு அழுத்த
வெவ் விழி மூன்றாய் விளங்குகின்ற
நீல கண்டத்து ஓர் தொழில் நெறி நின்ற
கால் கொண்டானைத் தென் கடையிற் காணலாமே
ஓம் நமசிவாய
சிவாய நமஓம்
ஓம் நமசிவாய
சிவாய நமஓம்
2
📚

கலைமகள் துதி

யா குந்தேந்து துஷார ஹார தவலா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டித கரா
யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரபி்ருதிபி
தேவைஸ் ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
நிஶ் ஶேஷ ஜாட்யாபஹா
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை — தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தி
னுள்ளே இருப்பளிங்கு வாராது இடர்
ஓம் ஐம் ஸரஸ்வத்யை நமஹ
வித்யா தேவி நமஸ்துபியம்
3
திருமதி ஜெகதாம்பாள் செல்வராசா

திருமதி ஜெகதாம்பாள் செல்வராசா

1953 – 2026

அன்பும் அறிவும் கொண்டவள்
என்றென்றும் நினைவுகளில் வாழ்வாள்

Femme de sagesse et d'amour
Elle vivra pour toujours dans nos cœurs

A woman of love and wisdom
She will live forever in our hearts

3A
காலவிதி கணக்கைச் சொல்லிடத் தீதிது;
படைசேர்ந்த தலையாழிப் பாவையே — நீர்
விசுவாசுவ தை ஐந்தாம் திங்களில், உத்திராட பிரதமை,
பிரான்சில் பன்னிரண்டு மணிக்குள் முடிந்தீர்.
மறைவு: 19 ஜனவரி 2026, 00:21 மணி
பொந்தொயிஸ், பிரான்ஸ்
4
ஜெகதாம்பாள் - இளமைக் காலம்

இளமைக் காலம்

கொக்குவில் சுடர் - தலையாழித் தங்கம்

கொக்குவில் பொற்ஊற்றார் சுடர்மூச்சில் பிறந்தது இந்தக் கதை. தங்கமாம் இரும்பை இழுத்து எஃகாக்கும் கற்பனைகள் கொண்ட கரங்கள், கொக்குகள் கூடு கட்டும் தலையாழி குளத்தங்கரையில், ஞானவைரவர் கோயில் வரலாறு கட்டிய வல்லமைக் கைகள். சங்கு ஒலிக்கும் சாலைகளில், சுடர் கக்கும் தொழிற்சாலையில், இலங்கைத் தீவின் கரம்பொன் இதயமாய் துடித்தது கொக்குவில். யாழின் காதுகளில் ஒலித்தது கரம்பன் கீதம். இவ்வாறு வரலாற்றை வார்த்த வல்லமைக் கைகளின் வழித்தோன்றல்தான் ஜெகதாம்பாள்.

5
ஜெகராஜா மற்றும் பாக்கியலட்சுமி

கரம்பன் வாசியும் ஜெகராஜா & தலையாழியாள் பாக்கியலட்சுமி

நவகோள் மகிழக் கண்டார் எம் பெற்றோர்
அறன்திறன் ஆண்டார்
எண்ணும் எழுத்தும் என்றும் மின்னிடும்
தங்கங்கள் பதக்கமாய் என்றென்றும்

நவமணிகளின் பெற்றோர்
கொக்குவில் கரம்பன் பாரம்பரியம்

5A

எம் அம்மவின் பந்தம் பாசம்

வாழ்க்கையின் வழிகளே பிள்ளையின் கல்வியாம்

📖 அம்மா பாக்கியலட்சுமியின் நாட்குறிப்பிலிருந்து

கண்டெடுத்தவர்: இளைய தம்பி ராஜா

கண்டனத்திடையே வாழும் பிள்ளை
கண்டனம் செய்யவே கற்றுக் கொள்ளும்

பகமையில் இடையே வாழும் பிள்ளை
பலரையும் எதிர்க்கப் பழகிக் கொள்ளும்

கேலிகளிடையே வாழும் பிள்ளை
கூச்சமும் நாணமும் கொள்ளவும் பழகும்

பொறாமையின் இடையே வாழும் பிள்ளை
குற்ற உணர்வு கொண்டிடப் பழகும்

சகிப்புச் சூழலில் வாழம் பிள்ளை
பொறுமை உணர்வு கொண்டிடப் பழகும்

ஊக்குதல் இடையே வாழம் பிள்ளை
தன் நம்பிக்கை தான் கொள்ளப் பயிலும்

பாரட்டுச்சூளலில் வாழம் பிள்ளை
நயக்குந் திறமையைத் நன்கு வளர்க்கும்

நீதியின் இடையே வாழம் பிள்ளை
நியாயம் புத்தியைக் கற்றுக்கொள்ளும்

ஒப்புதல் இடையே வாழம் பிள்ளை
தன்னை மதிக்கும் தன்மையிற் சிறக்கும்

மற்றையோர் மதித்திட நட்பில் வாழ் பிள்ளைக்கே
இப்புவி அன்பினால் இயங்குதல் காணுமே

5B

ஜெகபாக்கிய குடும்பம் - நவமணிகளின் பிறப்பு

கரம்பன் வாசியும் ஜெகராஜா, தலையாழியாள் பாக்கியலட்சுமி தம்பதிகள் படைத்ததொர் நல்லதோர் குடும்பம். அப்பார் மக்கள் வளர்த்தனர் கல்வியால் வழாக கடாட்ஷம், யாழ்பாணத்தின் தலையாழியில் உதித்தது நவகிரகள் குடும்பம். மலர்ந்தன ஐம்பாள் விருட்ஷம் உந்திப்பற, நால்மறை காத்திட ஶ்ரீமார் பலம், கவச குண்டலங்களும் கைகூடும் நிமலரடி ஶ்ரீமார் கவசம் தனை.

மனையில் உதித்தது ஓர் பல்கலைக்கழகம். நவகோள் மகிழக் கண்டார் எம் பெற்றோர். அறன்திறன் ஆண்டார் அவதரித்த எண்ணும் எழுத்தும் என்றும் மின்னிடும் தங்கங்கள் பதக்கமாய் என்றென்றும். இவ்வாறு நவமணிகள் நவகோள் வரிசையாக உதித்தனர்:

தேவகுஞ்சராம்பாள் • ஞானாம்பாள் • ஜெகதாம்பாள் • கிரிசாம்பாள் •
ஶ்ரீ கந்தராஜா • ஶ்ரீ சந்தணராஜா • சுந்தராம்பாள் •
ஶ்ரீ சௌந்தர்ராஜா • ஶ்ரீ நவரத்னராஜா

6

ஜெகதாம்பாள் - கல்வி வாழ்க்கை

குடும்ப வரிசையில் மூன்றாவது மகளாக, 1953 இல் பிறந்தார் ஜெகதாம்பாள். 1956 இல் மூன்றாம் வயதில் வித்தியா ஆரம்பம், திருவாளர் திரவியம் ஆசிரியர் தொடக்கி வைத்தார். 1957, 1958, 1959 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பெரியபுலம் மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையில் அரிவரி தரம் 1, தரம் 2 கற்றார்.

1960, 1961 இல் கரம்பொன் சிறுவர் பூ கூடம் (லிட்டில் பிளவர் கான்வென்டில்) 3ஆம் தரமும், கிழக்கு மட தமிழ் பாடசாலையில் 4ஆம் தரமும் கற்றார். 1962 முதல் 1970 வரை மீண்டும் பெரியபுலம் மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையில் தரம் 4 தொடக்கம் தரம் 11 வரை கற்றார். தமிழர் பண்பாட்டின்படி தரம் 10, 11 துண்டு தாவணி அணிந்து கல்வியைக் கற்று வந்தார்.

7

கல்லூரி காலம் - தங்கப் பதக்கங்கள்

1970 முதல் 1973 வரை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கலைப் பாடநெறியில் கற்று மிகத் திறமையான பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகக் கல்விக்கு சென்றார். இங்கு சிறந்த பேச்சாளராக விளங்கி, கொக்குவில் இந்துக் கல்லூரி "இராச சந்திரா" பேச்சுப் போட்டியில் பல தங்கப் பதக்கங்களையும் பெற்றிருந்தார். தமிழ்த் தினப் போட்டிகளிலும் பரிசில்கள் பெற்றிருந்தார்.

1974, 1975, 1976 ஆண்டுகளில் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தில் கற்று சிறந்த பெறுபேற்றைப் பெற்றார். பின்னர் கொழும்பில் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புள்ளிவிவரவியலாளராக கடமை ஆற்றினார்.

வாழ்க்கைப் பயணம்

1989, 1990களில் திரு செல்வராசா அவர்களுடன் திருமண பந்தத்தில் கலந்து பிரான்ஸ் நாட்டினில் வாழும் காலத்தில் அஸ்வினி, சிவாஜினி என இரு பெண் குழந்தைகளைப் பெற்று இற்றைவரை வாழ்ந்து வந்தார்.

ஜெகதாம்பாள் அழகும் அறிவும் செம்மையும் கொண்டவராக வாழ்ந்தது மட்டுமன்றி, கற்பித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உற்றார் உறவினருடனும், பெரியோர்களுடனும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். சகோதர பாசத்திலும் குறை கூற முடியாது.

8

முடிவுரை

இவ்வாறு இரவும் பகலும் மனைக்கலைக்கு ஜோடியாக, விதிஅமைத்த வீதிகளில் கைவினைக் கீதம் பாடி, வரலாறு எழுதிய வண்ணத் தமிழர்கள் வரிசையில் ஜெகதாம்பாள் நீரும் ஆவீர்.

தற்பொழுது 19.01.2026 இல் இயற்கை எய்தி நீள் துயில் கொண்டுள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
9
திருமண விழா

திருமண விழா

குடும்பம்

குடும்ப மகிழ்ச்சி

குடும்பம்

அன்பு நிறைந்த குடும்பம்

9A
இளம் தம்பதி

இளமைக் காலம்

டச்சு துலிப் தோட்டம்

நெதர்லாந்து – துலிப் தோட்டத்தில்

கடற்கரையில் குடும்பம்

கடற்கரையில் குடும்பத்துடன் – Zee, நெதர்லாந்து / பெல்ஜியம்

வாழ்வின் ஒவ்வொரு கணமும்
நினைவுகளாக நீடிக்கும்

9B

திரு செல்வராசா கந்தசாமி

அன்பு கணவர்

Époux bien-aimé

Beloved Husband

என்றும் அன்பும் பாசமும் நிறைந்த ஜெகா… எங்கு சென்றீர்கள்? நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததையெல்லாம் சுட்டிக்காட்டினீர்கள். ஆனால் அதையெல்லாம் செய்ய வைக்க முடியவில்லை உங்களுக்கு. உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று நினைத்துவிட்டு, எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டீர்களா?

தாயே… நீங்கள் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பீர்கள். எழுதப்பட்ட விதி நிறைவேறிவிட்டது.

19-01-2026

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கணவரின் இதயத்திலிருந்து

Jega, toujours remplie d'amour et d'affection… où es-tu partie ? Tu as évoqué tout ce que tu voulais accomplir. Mais tu n'as pas pu réaliser tout cela. As-tu pensé que personne ne te comprenait, et nous as-tu quittés pour cette raison ?

Mère… si tu étais restée, tu aurais vécu heureuse. Le destin écrit s'est accompli.

19-01-2026

Je prie Dieu pour que ton âme trouve la paix.

Du cœur de ton époux

Jega, forever filled with love and affection… where have you gone? You pointed out everything you wanted to do. But you couldn't make it all happen. Did you think no one understood you, and leave us because of that?

Mother… if you had stayed, you would have lived happily. The written destiny has been fulfilled.

19-01-2026

I pray to God that your soul may find peace.

From your husband's heart

செல்வராஜாவின் கையெழுத்து Manuscrit de Selvarajah Selvarajah's handwriting

💕

கணவரின் இதயத்திலிருந்து... Du cœur d'un mari... From a husband's heart...

10

சிவாஜினி & அஸ்வினி

அன்பு மகள்கள்

Filles bien-aimées

Beloved Daughters

எங்கள் ஆசை அம்மா

Ma bien-aimée maman S. Jegathamba

Our Beloved Mother

உங்கள் அன்பு மகள் சிவாஜினி, செல்ல மகள் அஸ்வினி எழுதுகிறோம்.

நீங்கள் ஒரு அன்புள்ள, பாசமுள்ள எங்களுக்குத் தாயாகவும், அக்கறையான அப்பாவுக்கு மனைவியாகவும் இருந்தீர்கள்... இருக்கின்றீர்கள்... இருப்பீர்கள்...

நன்றி அம்மா.

எங்கள் மனதில் எப்போதும் இருப்பீர்கள்.

கடவுளிடம் சென்றீர்கள். அமைதியோடு இளைப்பாறுங்கள்.

அன்புடன்,
சிவாஜினி, அஸ்வினி
மற்றும் கணவர் செல்வராஜா

Tes gentilles deux filles, Sivagini et Aswini, t'écrivent.

Tu es une aimante et affective maman, et aussi une bienveillante épouse pour papa K. Selvarajah... Tu l'étais, tu l'es et tu le seras tout le temps.

Merci maman.

Tu seras toujours dans notre cœur.

Tu es partie à Dieu. Sois en paix.

💐

Avec amour,
Sivagini, Aswini
et papa Selvarajah

Your loving daughters, Sivagini and Aswini, write to you.

You were, are, and will always be a loving and affectionate mother to us, and a caring and devoted wife to papa K. Selvarajah...

Thank you, Amma.

You will always live in our hearts.

You have gone to God. Rest in peace.

With love,
Sivagini, Aswini
and husband Selvarajah

11

Sébastien & Deborah

குடும்ப நண்பர்கள்

Amis de la famille

Friends of the family

« Puisse ta maman reposer en paix sans souffrance et qu'elle veille sur toi et ta famille. Nous prions pour le repos de son âme. »

🕊️

Sébastien & Deborah

உங்கள் அம்மா துன்பமின்றி அமைதியாக இளைப்பாறட்டும், அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றட்டும். அவரது ஆத்மா அமைதி பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

🕊️

Sébastien & Deborah

"May your mother rest in peace without suffering and may she watch over you and your family. We pray for the peace of her soul."

🕊️

Sébastien & Deborah

11A
💝

சகோதரர்கள் பங்களிப்புகள்

நவமணிகளின் நினைவுகள்

நவமணிகள் குடும்பம்

ஜெகராஜா குடும்பம் - நவமணிகள்

தேவகுஞ்சராம்பாள்† • ஞானாம்பாள்ஜெகதாம்பாள்† • கிரிசாம்பாள் •
ஶ்ரீ கந்தராஜா • ஶ்ரீ சந்தணராஜா • சுந்தராம்பாள் •
ஶ்ரீ சௌந்தர்ராஜா • ஶ்ரீ நவரத்னராஜா

12

தேவகுஞ்சராம்பாள்

மூத்த சகோதரி

கணவர்: மனோகரன் †

நவமணிகள் குடும்பம்

நின்று (இடமிருந்து வலம்):
கிரிசாம்பாள்  •  அம்மா  •  தேவகுஞ்சராம்பாள் †  •  சுந்தராம்பாள் (நடுவில்)  •  ஜெகதாம்பாள் †  •  ஞானாம்பாள்  •  ஶ்ரீ சந்தணராஜா  •  ஶ்ரீ கந்தராஜா

உட்கார்ந்து (இடமிருந்து வலம்):
ஶ்ரீ நவரத்னராஜா  •  ஶ்ரீ சௌந்தர்ராஜா

📍 அம்மாவின் தலையாழி வீடு  •  சுந்தராம்பாளின் பூ புனித நீராட்டு வைபவம்
✨ நவமணிகள் 9 பேரும் + அம்மா — ஒன்றாக!

விண்ணேற்று: 2019
இங்கிலாந்து

கணவர்: திரு கசிப்பிள்ளை மனோகரன் †
(விண்ணேற்று: 2025, இங்கிலாந்து)

🙏

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

13

ஞானாம்பாள்

2வது அன்புச்சகோதரி

கணவர்: யோகேஸ்வரன்

என் அன்புச்சகோதரி ஜெகதாம்பாளுக்கு...

ஞானாம்பாளின் கையெழுத்து கடிதம்
25.01.2026

🎙️

குரல் பதிவு

ஞானாம்பாளின் குரலில் இந்த கடிதம்

💕

அக்காவின் அன்பு நினைவுகள்

14

சுந்தராம்பாள்

7வது அன்புச்சகோதரி

கணவர்: மகேஸ்வரன்†

அன்புச்சகோதரி ஜெகதாக்காவுடன் வாழ்ந்த காலம்...

மூத்த செல்வத்தை இழந்து அடுத்து உமை இழந்து விட்டோம். அன்று அம்மாவுடன் வாழ்ந்த காலத்தில் எனது கல்வியில் அக்கறை செலுத்தி ஒவ்வொரு பேச்சுப்போட்டிகளிலும் நின் போல் என்னையும் முதலிடம் பெறச்செய்து படிப்பில் உயர்த்தி வைத்ததை மறப்பேனோ?

நான் பல்கலைக்கழகம் செல்லாவிட்டாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உம்முடன் விடுதியில் வாழ்ந்ததை மறப்பேனோ?

இன்றும் அழியா நினைவாக இருக்கிறது உங்களுடன் வாழ்ந்த காலம்.

— அன்புடன்,
மகேஸ்வரன் சுந்தராம்பாள்
15

கிரிசாம்பாள்

4வது அன்புச்சகோதரி

கணவர்: கிருஸ்ணசாமி†

உயிர் எழுத்தால் வணங்கினேன் அக்கா

னைவருடனும் அன்பாக இருக்க விரும்பிய ஜெகதா அக்கா
சையாக இரு பெண் பிள்ளைகளை வளர்த்த அக்கா
ன்பமாக கணவருடன் சேர்ந்து வாழ்ந்த அக்கா
சன் திருவடிகளை அடையச் சென்ற அக்கா
ங்கள் கல்விப் பெருமைகள் பலதே அக்கா
ரார் போற்ற ஒரு காலத்தில் வாழ்ந்தீர் அக்கா
ங்கள் சகோதரியே ஜெகதாம்பாள் அக்கா
ன் எங்கள் யாவரையும் தவிக்க விட்டீர் அக்கா
ங்கரனின் தம்பி வேலனை வணங்கி மகிழ்ந்த அக்கா
ன்பது கிரகங்களாக நாம் திசை பிரிந்தோம் அக்கா
ம் என்ற ஒலியாக ஒன்று சேர்வோம் அக்கா
வை மொழியாம் "ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி"யில்
உயர்வாய் எங்கள் அக்கா
ஆயுத எழுத்தாம் "வேலாயும்" கொண்ட பெருமானிடம்
கலந்து மகிழ்வாய் எங்கள் மூன்றாவது அக்கா.

கிரிசாம்பாளின் கையெழுத்து கவிதை

கிரிசாம்பாளின் கையெழுத்து

சுபம்

🌺

உங்கள் சகோதரி,
கிருஸ்ணசாமி கிரிசாம்பாள்
இலங்கை

16

ஶ்ரீ கந்தராஜா

5வது சகோதரன் (பெரிய தம்பி)

பெரிய தம்பியின் பாச உரை

பாசமும் நேசமும் கொண்ட ஜெகதா அக்கா பல்கலைக்கு கண்டியும், தொழிலுக்கு கொழும்பென்றும், பின்னும் குடும்ப வாழ்வுக்காக பிரான்ஸ் நாடென்றும் சென்றீர் - எனினும்

நான் துயர் கொள்ளவில்லை இன்பமே கொண்டேன்

அன்றிருந்த நிலை மாறி இன்று என் நிலை கண்டு இரக்கம் கொண்டீர். தொலைபேசியில் பேசியும், ஆறுதல் வார்த்தைகளும் கூறிவந்தீரே.

குடும்பமாக இலங்கை வந்தாலும் என் நிலை கண்டு பல உதவிகள் செய்தீர்களே

இவற்றை எண்ணும் போது எப்படி உங்களை மறப்பேன்?

உங்கள் அறிவு தகுதிக்கும் ஆழ்ந்த ஆளுமைக்கும் பெருமைப்பட்டேன். புகழ் பூத்து வாழ்ந்திருந்தேன். எம் அன்னை அடிக்கடி கூறுவார்

"எப்பிறப்பும் கிடைக்கும், ஆனால் சகோதரப் பிறப்பு கிடைக்காது"

"வாழும் கால் மகிழ்ந்திருங்கள்"

என்றும் கூறுவது நினைவில் வருகிறது

இன்றோ நாம் இனிமேல் பார்க்க முடியாதபடி நீள்தூரம் சென்றது ஏனோ? அக்கா… !

ஜெகம் ஆளப்பிறந்த ஜெகதாக்காவே அவசரமாய் விண்ணுக்கு ஏகியது ஏனோ? பேசிய வாயும் ஓய்ந்து விட்டதே வாழ்ந்திடுவீர் அவ்வுலகில் தெய்வீகமாக வாழ்த்துகின்றேன் எனும்

அன்புடன்
பெரிய தம்பி,
ஜெகராஜா ஶ்ரீ கந்தராஜா + குடும்பம்
கனகராஜன்குளம்

17

ஶ்ரீ சந்தணராஜா

6வது சகோதரன் (சின்ன தம்பி)

தாயின் கொடியில் நாமும்

"எனக்கொரு அன்னை படைத்தவள் உன்னை
அவள் பெயர் ஜெகதாம்பாள்"

திருமதி செல்வராசா, தெய்வத்திரு ஜெகதாம்பாள் என் சகோதரி புவியில் தோன்றி மறைந்த பெருமையின் புகழ் காண்பீரோ!

பெற்றவர் தமக்கு பெருமை தந்திட கல்வியில் சிறந்தாயே. மற்றவர் மதிபெற கற்றவர் தமக்கெல்லாம் தானும் ஒருவராய் திகழ்ந்தாயே.

இதிகாச வரலாறும் இறையருள் பெருமைகளும் பிறர் அறிந்திட புத்தகம் (பாவாடை) தரித்தாயே. கல்வியின் சிறப்பு மேடைகளில் பேச்சுரையாற்றி தங்கப்பதக்கங்கள் பெற்றாயே.

சமையல் செய்வது ஒரு புறம், கட்டுரை எழுதி படிப்பது ஒரு புறம் என்றெல்லாம் கற்றதன் பயனென பல்கலைக்கழகம் சென்று உயர் பேற்றினை பெற்று கல்விக்கு அதிபதி கலைமகள் மகிழ்ந்திடும் வரிசையில் இருந்தாயே.

தாய் சகோதரர்களுக்கும் உற்றாருக்கும் தான் பெற்ற கல்வியிலும் உழைப்பின் நிதியிலும் உதவிகள் பகிர்ந்தாயே.

திருமண நாள் கண்டு உற்றார் ஊரார் போற்ற திருமாங்கல்யதாரண விழா கண்டு கணவரிடம் அந்நிய நாடு சென்று வாழ்ந்த மகிழ்வினில் அஸ்வினி சிவாஜினி இரு மகளையும் பெற்றாயே.

பிழை பொறுக்கும் ஒரு தாயாக என் சகோதரியாக என் பிழை இருப்பின் அதை பொறுத்தருள வேண்டுகிறேன்.

ஶ்ரீ சந்தணராஜாவின் கையெழுத்து

ஶ்ரீ சந்தணராஜாவின் கையெழுத்து

🎙️

குரல் பதிவு

ஶ்ரீ சந்தணராஜாவின் குரலில்

அன்புடன்
சின்ன தம்பி
ஜெகராஜா ஸ்ரீ சந்தணராசா + குடும்பம்
சங்கானை

வாழ்ந்து மறைந்த வரலாற்றில் உம்மையும் ஒரு காவியமாய்
கற்றோர்கள் சபை ஏற்றிருக்கும்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

18

ஶ்ரீ சௌந்தர்ராஜா

8வது சகோதரன்

8ème frère

8th Brother

மனைவி: பாமினி • பிள்ளைகள் • மருமகன் • பேரன்

ஜேர்மனி

தம்பி நந்தனின் இரங்கல்

ஒர் தாய் வயிற்றினில் நவமணிகளாய் உதித்தோம் நாம்
ஊர் போற்றும் சகோதரராய் வாழ்ந்தோம் நாம்
அன்பிற்கு இலக்கணமாய் பண்புடைமை காத்து
பக்குவமாய் எமை நீர் வழிநடத்தினீர்

அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும்
கல்வியில் முன்மாதிரியாய் இருந்தீரே ஜெகதா அக்கா நீர்

விதியால் நாம் பிரிந்திருந்தும் விலகிநின்றும் இணைந்திருந்தோமே,
கண்முன்னே வாழ்ந்தகாலம் கனவாகிப்போனாலும்
மண்விட்டு மறைந்து ஆண்டவனிடம் நீர்சேர்ந்தாலும்
கண்விட்டு மறையாமல் என் மனதினில் நீர் இருப்பீர்

மீண்டும் ஒர் பிறப்புண்டெனில் சகோதரராய் பிறந்து
நாமும் இணைபிரியாது வாழ்ந்திட ஆண்டவனை தொழுவேன்

அன்புடன் அப்பு
ஜெகராஜா ஸ்ரீ சௌந்தர்ராஜா + குடும்பம்
மனைவி பாமினி
பிள்ளைகள், மருமகன், பேரன்
ஜேர்மனி

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

19
🕉️

காலவிதி

விதியின் அறிவிப்பு

காலவிதி கணக்கைச் சொல்லிடத் தீதிது;
படைசேர்ந்த தலையாழிப் பாவையே

விசுவாவசு ஆண்டுத் தைத் திங்களில்,
ஐந்தாம் நன்னாளில்,
உத்தராட நட்சத்திர
தை வளர்பிறையாம் பிரதமை என்னும் திதியினில்

பிரான்ஸ் நாட்டினில் ஈராறு மணிக்குள்

செல்வராஜாவின் வாழ்க்கைத் துணைவியாம்
ஜெகதாம்பாள்
சுமங்கலியாக எழுபத்திரண்டாம் அகவையில்
நீத்தாள் இவ் வையகத்தை விட்டு

இறைவனின் திருப்பாதம் காண
சென்றாளாம் அங்கு

19 ஜனவரி 2026
செவ்வாய்க்கிழமை
பிரான்ஸ்

🙏

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

19A

பாமினி

மைத்துனி • ஸ்ரீ சௌந்தர்ராஜாவின் துணைவி

Belle-sœur — épouse de Sri Sundararajah

Sister-in-law — wife of Sri Sundararajah

ஜேர்மனி

மைத்துனி பாமினியின் இரங்கல்

ஜெகதா அக்கா. ஜெகதா அக்கா.. என
உமை அழைத்த என் நாவு இனி யாரை அழைக்குமோ..

உங்கள் சாந்த முகத்தை இனி நாம் எங்கு தேடுவதோ

நாங்கள் வீட்டுக்கு வந்த வேளை எம்மை அன்புடன் அரவணைத்து
உணவளித்து உபசரித்தமையை இனி எங்கு காண்பேனோ...

நோய் வந்த போதிலும் இன்முகத்துடன் கதைத்தீரே
உமை படைத்தவரே அழைத்துக் கொண்டாரே...

உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகிறோம்
ஜெகதா அக்கா.

அன்புடன்,
பாமினி
ஜேர்மனி

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

19B

ஶ்ரீ நவரத்னராஜா

9வது சகோதரன் (இளைய தம்பி)

9ème frère (le plus jeune)

9th Brother (youngest)

🌺 நினைவு மலர் – சிறப்பு பக்கம் 🌺

அர்ப்பணம் – அன்பு சகோதரன் ராஜா (Sri)
இதயத்தின் மொழியில்

🪔 எம்பாவாய் – நினைவு அழைப்பு 🪔

(1)

துயில் கண்டு எழுந்திடுவீர், எம்பால் சோதரியே,
விழி திறந்து காண்க நீர், எஞ்சிய பாச உலகை.
கவி ஏறும் எழுத்தாற்றல் கடலாய்த் திரண்டெழுவீர்,
கலைமகளே — அதுவும் உம் கை வசமே.
உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.

(2)

கூப்பிட்ட குரல் எங்கே? ஆறாதது குறை யாது?
உரைக்க வந்த வார்த்தைகள் உறையுண்டு நின்றனவோ?
ஏற்று வந்த கடமையெல்லாம் தீர்க்க அவன் உண்டே,
ஆர் அறிவார் அவ்வுருவை?
உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.

(3)

கூப்பிய உம் கரங்கள் கண்டேன் — வாயடைத்த பாவை;
உம் பாசமே நான் கண்டேன். வினை கொண்ட உறவு எமக்கு,
கடன் பரிந்தீர், எம் பாசக் கயிற்றுக்கு திதி கூடி இணைந்தாய்.
பாவி நான் பரமனிடம் பரிந்துரைக்க ஏதுண்டோ? மன்னித்து ஏற்பீரோ?
உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.

(4)

காலனிட்ட கணக்குக்குக் குறையுண்டோ? பூரணமே.
இதனை உரைக்க நீர் அருகில் துணை நிற்பீர் உம் வாரிசுடன்.
எவர் உற்றார் இக்குலத்தில் இதை மறுக்க?
பரம்பொருளே பாதிப்பான் இத்தடை விதிக்க.
உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.

(5)

உடல் நீராய், தீயாய், காற்றாய், மண்ணாய், ஆற்றில் மீண்டது —
ஆனால் அன்பும் நினைவும் கரையாதே.
பரமனவன் பாத்திரத்தில் அவதாரம் — இனியும் பல பகிர்வுண்டு.
உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.

இது குற்றமல்ல — இயற்கையின் விதி.
நான் மனிதன்; எனக்கு இதயம் உண்டு.
அன்பின் மொழியில் எழுந்த இந்த அழைப்பு
அவரின் ஆத்மா ஒளியடைய வழி செய்யட்டும்.

🕉️ ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🕉️

அன்புடன் சின்ன ஶ்ரீ
ஜெகராஜா ஶ்ரீ நவரத்னராஜா + குடும்பம்
நேதர்லாந்து

20

Astrid

Former partner of Sri Navaratnarajah

My memory is when your family visited our campingplace near Dieppe along the seaside. Driving around to find a B&B for the weekend, we spotted a wild boar (pig) in the fields. Immediately you decided to return to Pontoise. Although you seemed to enjoy the countryside, you were too much a city girl.

Another memory is when we visited your house as a family. One time you were very generous to encourage me to join the 14th july fireworks in Pontoise, which were spectacular reflecting in the river.

While you stayed at home ironing clothes for Babitha's wedding the next day.

I am sorry to have been informed about your passing.

For yourself that you passed away a little too early. That you are no longer able to accompany your daughter's lives and be together with your partner.

I hope you have lived a fulfilling live in trust that your memory will help your relatives to continue.

Astrid
Nederland

20A

Caspar, Anna Vera & Donnah Sagarajah

பேரக்குழந்தைகள்

Petits-enfants

Grandchildren

நவரத்னராஜா (ராஜா) குடும்பம் Famille de Navaratnarajah (Rajah) Family of Navaratnarajah (Rajah)

பாட்டிக்கு அன்பான ஓவியம்

Un dessin d'amour pour grand-mère

A loving drawing for grandmother

Donnah's drawing

டொனாவின் ஓவியம்
🦋 வண்ணத்துப்பூச்சி • 🌸 பூ • 🕊️ பறவைகள்
Dessin de Donnah
🦋 Papillon • 🌸 Fleur • 🕊️ Oiseaux
Donnah's drawing
🦋 Butterfly • 🌸 Flower • 🕊️ Birds

ஒரு பேரக்குழந்தையின் அன்பு,
வண்ணங்களில் வெளிப்பட்டது.
பாட்டியின் நினைவுகள்,
என்றென்றும் பூத்திருக்கும்.
L'amour d'une petite-fille,
exprimé en couleurs.
Les souvenirs de grand-mère,
fleuriront pour toujours.
A granddaughter's love,
expressed in colors.
Grandmother's memories,
will bloom forever.

அத்தை ஜெகதாவுக்கான நினைவஞ்சலி

Hommage à tante Jegatha

Eulogy for auntie Jegatha

As children, there were many summers where on our family holiday trips through France we would stop to visit our auntie Jegatha. We would talk with our cousins, or go on a walk outside. One time we all went together into Paris to see the city which is a memory we both think of fondly.

We will dearly miss our aunt Jegatha, and we wish our uncle, Selva and our cousins Asvini and Sivagini strength and kindness in these difficult times.

Our heartfelt condolences,

எம் அன்பு ஜெகதா பெரியம்மா,

உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் எங்கள் வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கும்.

உங்கள் நினைவு எங்கள் இதயங்களில் என்றும் வாழும்.

உங்கள் மருமட்கள்,
Caspar, Anna Vera & Donnah Sagarajah

Quand nous étions enfants, il y avait beaucoup d'étés où, lors de nos vacances familiales en France, nous nous arrêtions pour rendre visite à notre tante Jegatha. Nous parlions avec nos cousins ou nous faisions une promenade dehors. Une fois, nous sommes tous allés ensemble à Paris pour voir la ville, un souvenir que nous chérissons tous.

Notre tante Jegatha nous manquera beaucoup, et nous souhaitons à notre oncle Selva et à nos cousines Asvini et Sivagini force et bienveillance en ces moments difficiles.

Nos sincères condoléances,

🌸

Caspar, Anna Vera & Donnah Sagarajah

நெதர்லாந்து Pays-Bas The Netherlands

20B
💐

நண்பர்கள்

Amis & Camarades

Friends & Batchmates

Friends & Batchmates

Amis et Camarades de Promotion — Université de Peradeniya 1972–1976

Friends & Batchmates — University of Peradeniya 1972–1976

பேராதனை பல்கலைக்கழகம்
University of Peradeniya
1972 — 1976

நட்பு என்றென்றும்
Friendship Forever

28

Kumuthini Waman-Pillay

Friend • Australia

Dearest Jega

Ma très chère Jega

A beautiful lady with a beautiful soul. Always very cheerful and loves to chat. I cherish every moment of her conversation.

The universe whispered to her that she no longer has to suffer and waiting to embrace her in the heavenly garden. Our lovable Jega attained peace however the grieving daughters and husband are in a terrible loss and feels empty and devastated.

Kumu and family humbly extend our heartfelt condolences to her family. May the almighty give strength and courage to the family to move forward our love and prayers.

My dearest Jega I write this note to your family with heavy heart and grief of your sudden loss.

Om Shanthi

Une belle dame avec une belle âme. Toujours très joyeuse et adorant discuter. Je chéris chaque instant de nos conversations.

L'univers lui a murmuré qu'elle n'avait plus à souffrir, et l'attendait pour l'accueillir dans le jardin céleste. Notre chère Jega a trouvé la paix, mais ses filles et son mari, dans leur deuil, ressentent un vide immense et une douleur profonde.

Kumu et sa famille présentent humblement leurs sincères condoléances à la famille. Que le Tout-Puissant donne force et courage à la famille pour avancer — notre amour et nos prières vous accompagnent.

Ma très chère Jega, c'est avec un cœur lourd et un immense chagrin que j'écris ces mots à ta famille, après ta perte soudaine.

Om Shanthi

Kumuthini Waman-Pillay
Australia

29

Niranjana Manickavasagar

Roommate 4 years • United Kingdom

Colocataire 4 ans • Royaume-Uni

Tribute to my dearest friend Jegatha Selvarajah

My roommate for 4 years in University of Peradeniya Srilanka. The first time I met Jegatha in May 1972 at Sangamitta hall of residence when we were both waiting in a queue. When our turn came, the warden asked us whether we would like to share the same room and be roommates? Both of us looked at each other and said ok and we continued that tradition for 4 years in the university.

She always enthusiastic about everything and I am just the opposite, however, we always followed each other in fashion (same hairstyle). The other students asked us whether we are sisters.

Both of us got our degrees and went on different directions. We lost contact with each other for nearly forty years. The determination of Sugendra Tharmakumar finally located your whereabouts and then we chatted regularly through WhatsApp. Last time I talked to you was in November 2025 and didn't realise that this will be our last.

Luckily for me you've left me a voice message which I still have so I can hear your voice again and again. Now for your lovely daughters both suffering an immense loss, dear daughters Ashwani and Sivajina your momma will always stay with you and look after you like a guardian angel over you.

Albert Einstein once said:

"Our death is not an end if we can live on our children for they are us, our bodies are only wilted leaves on the tree of life".

She who is not forgotten is not dead.

Rest in peace dear friend. Always missed but not forgotten until we meet again.

Niranjana Manickavasagar
United Kingdom

30

Manohary

Batchmate • United Kingdom

Tribute to Jegatha

Yes, she was an angel, elegant and beautiful. Flying butterfly in our campus. Very hardworking and enthusiastic person. She was proud of higher job. Successful married life and lovely two daughters.

Joined with batchmates in 2020. Enjoy with them and chatting with them. Sharing their thoughts and experiences. I was only able to join with them in middle of 2025. We had a memorable chat and was so happy but very sad that we cannot do it anymore.

You are certainly in a peaceful place with no pain. Loving memories will live on forever. May her beautiful Soul Rest in Peace.

Om Shanthi

Yours loving batchmate
Manohary
United Kingdom

25
🔱

தொகுப்பு

குடும்ப பாரம்பரியமும் குலதெய்வமும்

உலகம் பரவி வாழும் எமது குடும்பத்தினருக்கு
எமது பாரம்பரியத்தையும் மரபுகளையும்
அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும்
ஒரு சிறு முயற்சி

கொக்குவில் தட்டார் பாரம்பரியம்
ஜெகபாக்கிய குடும்பம்

26

ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ

எமது குடும்பத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கும் முன், விநாயகரை வணங்கிய பின், "ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று சொல்லி விராட் விஸ்வபிரமரை வணங்குவது எமது மரபு. இது ஏன் என்பதை இன்றைய உலகம் பரவி வாழும் எமது குடும்பத்தினர் அறிந்திருப்பது முக்கியம்.

விராட் விஸ்வபிரமர் யார்?

விஸ்வபிரமர் என்பவர் பிரபஞ்சத்தின் தெய்வீக சிற்பியும், கட்டடக் கலைஞரும் ஆவார். "விராட்" என்றால் பிரம்மாண்டமானவர், "விஸ்வ" என்றால் பிரபஞ்சம், "பிரம்மா" என்றால் படைப்பாளி. ஆக விராட் விஸ்வபிரமர் என்றால் "பிரபஞ்சப் படைப்பின் விரிவான கட்டமைப்பாளர்" என்று பொருள்.

புராணங்களின்படி, விஸ்வபிரமர் பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர். இவர் தேவர்களுக்கான அரண்மனைகள், ஆயுதங்கள், ஆபரணங்கள் அனைத்தையும் படைத்தவர். இந்திரனின் வஜ்ராயுதம், குபேரனின் புஷ்பக விமானம், சிவபெருமானின் திரிசூலம் - இவையனைத்தும் விஸ்வபிரமரின் கைவண்ணம்.

மகா யாகம் - ஐந்து கலைஞர்களின் பிறப்பு

புராணக் கதையின்படி, ஒரு முறை விராட் விஸ்வபிரமர் ஒரு மகா யாகம் செய்தார். உலகிற்கு கைவினைக் கலைகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செய்த இந்த யாகக் குண்டத்திலிருந்து ஐந்து பேர் தோன்றினார்கள்.

யாக அக்கினியிலிருந்து பிறந்த ஐவர் -
கைவினைக் கலைகளின் தெய்வீக மூலம்

இந்தக் கதையின் ஆழ்ந்த பொருள்: கைவினைக் கலைகள் சாதாரண தொழில்கள் அல்ல - அவை தெய்வீக தோற்றம் கொண்டவை. யாகத்திலிருந்து பிறந்தவை என்றால், அவை ஒழுங்குமுறை, சடங்கு, புனிதத்தன்மை, சமூக நன்மை ஆகியவற்றின் அடையாளங்கள்.

27

பஞ்ச விஸ்வகர்மர்கள் - ஐந்து கைவினைக் கலைகள்

யாகக் குண்டத்திலிருந்து தோன்றிய ஐந்து பேரும், ஐந்து வெவ்வேறு கைவினைக் கலைகளை உலகிற்கு அளித்தனர். இவர்களே "பஞ்ச விஸ்வகர்மர்கள்" அல்லது "பஞ்சகம்மாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

யாகத்திலிருந்து தோன்றிய ஐவர்

1. விசுவகர்மா

கட்டடக் கலைஞர், பொறியாளர்

2. கருச்சன்

தச்சு, மர வேலைக்காரர்

3. லோகர்

உலோக வேலைக்காரர் (கொல்லர்)

4. கனகர் / தட்டார் ⭐

பொன்-வெள்ளி வேலை

எமது குடும்பப் பாரம்பரியம்

5. குயிலர்

கல் செதுக்கல், சிற்பி

தெய்வீக தோற்றம் - ஆழ்ந்த பொருள்

இந்த ஐந்து கலைகளும் யாகத்திலிருந்து பிறந்தவை என்பதன் அர்த்தம்: கைவினை என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு தெய்வீக வரம். தங்கத்தை வடிவமைக்கும் கைகள், மரத்தைச் செதுக்கும் கைகள், கல்லை உயிர்ப்பிக்கும் கைகள் - இவையெல்லாம் விஸ்வபிரமரின் ஆசியுடன் செயல்படுகின்றன.

ஆகையால் எமது முன்னோர்கள் ஒவ்வொரு வேலையையும் ஆரம்பிக்கும் முன் "ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று சொல்லி, தங்களுடைய கைகளில் தெய்வீக சக்தி இருக்கிறது என்பதை நினைவில் கொண்டனர்.

28

ஈழநாட்டு – கொக்குவில் பொன்னாபரண கைவினைப் பாரம்பரியம்

எமது ஜெகபாக்கிய குடும்பம், யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த பொன்னாபரண கைவினை மரபைச் சேர்ந்தது. தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வளர்ந்த ஒரு சிறப்பு கலை மரபின் வாரிசுகள் நாங்கள்.

கொக்குவில் – ஒரு வரலாற்றுப் பூமி

கொக்குவில் என்பது, ஈழநாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பிரதேசமாகும். பண்டைய காலங்களில் இப்பகுதி நீர்வளம் செழித்து, பசுமையான சோலைகளால் சூழப்பட்டிருந்தது.

அந்தச் சோலைகளிலும் குளத்தங்கரைகளிலும் கொக்கு இனப் பறவைகள் அதிகமாகக் காணப்பட்டதால், இப்பகுதி "கொக்குவில்" என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. கொக்குகள் கூடு கட்டும் இடம் என்ற பொருளும் இதற்கு உண்டு.

தலையாழி குளம் அருகிலும், ஞானவைரவர் கோயில் சுற்றியுள்ள பகுதிகளிலும், தங்க வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற ஊராக கொக்குவில் விளங்கியது.

கரம்பன் – தங்கத்தின் இதயம்

"கரம்பொன்" என்பது "தங்கக் கை" என்ற பொருளை உடைய சொல். கொக்குவிலில் தங்க வேலைப்பாடுகளில் ஈடுபட்ட கைவினைஞர்கள், தலைமுறை தலைமுறையாக இந்தக் கலையை வளர்த்த வம்சத்தவர்கள்.

எமது தாயார் எமது தகப்பன், "கரம்பன்" வாசியை மணம் செய்ததன் மூலம், தலைமுறைகள் கடந்தும் தொடரும் இக் கைவினை மரபு எமது குடும்பத்தில் வேரூன்றியது. முன்னோர் காலத்தில் ஆச்சாரத்துடனும், ஒழுக்கத்துடனும் இந்தக் கலையைப் பாதுகாத்து வளர்த்ததினால், அவர்கள் "ஆச்சாரிகள்", "வித்துவான்கள்" என சமூகத்தில் உயர்ந்து போற்றப்பட்டனர்.

குழல்சங்கு ஒலிக்கும் சாலைகளிலும், தீச்சுடர் கக்கும் தொழிற்சாலைகளிலும், இலங்கைத் தீவின் தங்க இதயமாக கொக்குவில் துடித்தது.

எமது பெற்றோர்கள் – மரபின் வாரிசுகள்

எமது பெற்றோர்களான ஜெகராஜா மற்றும் பாக்கியலட்சுமி அவர்கள், இந்தப் பெருமைமிக்க மரபின் உண்மையான வாரிசுகள்.

அவர்கள் தங்களுடைய கைகளால் தங்கத்திற்கு உயிர் கொடுத்தவர்கள். தங்கத்தை வடிவமாக்கி, அழகாக மாற்றும் கற்பனை மற்றும் திறமை கொண்டவர்கள். வரலாற்றை உருவாக்கிய வல்லமையான கைகள் அவர்களுடையவை.

அந்தக் கைகளில் தான் எமது குடும்பத்தின் பெருமையும், மரபும், மரியாதையும் பதிந்துள்ளது.

விஸ்வபிரமர் - எமது குலதெய்வம்

தட்டார் மரபினருக்கு விஸ்வபிரமர் குலதெய்வமாக வணங்கப்படுகிறார். ஏனெனில் விஸ்வபிரமரே தேவர்களுக்கு ஆபரணங்கள் செய்த முதல் பொற்கொல்லர். இந்திரனின் கிரீடம், மகாலட்சுமியின் ஆபரணங்கள் - அனைத்தும் விஸ்வபிரமரின் கைவண்ணம்.

ஆகையால், எந்த ஒரு புதிய வேலையை ஆரம்பிக்கும் முன்பும், எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்யும் முன்பும், "ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று எமது குலதெய்வத்தை வணங்குவது எமது மரபு.

29

ஏன் இது முக்கியம்?

இன்று எமது குடும்பம் உலகம் பரவி வாழ்கிறது - இலங்கை, நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து என பல நாடுகளில். பல மொழிகள் கற்று, பல கலாச்சாரங்களுடன் கலந்துவிட்டோம். இது நல்லதே.

ஆனால் எமது வேர்களை மறந்துவிடக் கூடாது. அடுத்த தலைமுறை குழந்தைகள் "ஏன் நாம் விஸ்வபிரமரை வணங்குகிறோம்?" என்று கேட்கும்போது, நாம் பதில் சொல்ல வேண்டும்.

"பாரம்பரியம் என்பது
சாம்பலைப் பாதுகாத்தல் அல்ல,
நெருப்பை எடுத்துச் செல்லல்"

விராட் விஸ்வபிரமனிடமிருந்து நமக்குக் கிடைத்த அந்த நெருப்பு -
கலையின் நெருப்பு, படைப்பின் நெருப்பு, ஞானத்தின் நெருப்பு -
அதை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

எப்படி பாதுகாப்பது?

1. குடும்ப வரலாறு ஆவணப்படுத்துதல்
மூத்தவர்களிடம் கேட்டு எழுதுங்கள், பழைய புகைப்படங்களை பாதுகாத்து வைக்கவும்

2. விநாயகர் வணக்கம் + விஸ்வபிரமர் வணக்கம்
"ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று சொல்லிக் கொடுங்கள்

3. குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்
கொக்குவில், கரம்பன், தட்டார் பாரம்பரியத்தைப் பற்றி சொல்லுங்கள்

4. பாரம்பரியத்தை நவீனமயமாக்குங்கள்
பழைய கலைகளை புதிய வழிகளில் தொடருங்கள்

எமது கைகள் தங்கத்தை வடிவமைத்தன
எமது மனங்கள் கலையை உருவாக்கின
எமது குலதெய்வம் விஸ்வபிரமர்
எமது பாரம்பரியம் கொக்குவில் கரம்பன்

இதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது எமது கடமை

🔱

ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ

கொக்குவில் சுடர் - தலையாழித் தங்கம்
ஜெகபாக்கிய குடும்பம்
என்றென்றும் வாழ்க

30

குடும்ப வம்சாவளி

Arbre Généalogique

Family Tree

👴👵 ஜெகராஜா & பாக்கியலட்சுமி

கொக்குவில் • தலையாழி

✨ நவமணிகள் ✨

1️⃣ தேவகுஞ்சராம்பாள் † & மனோகரன் †
• இங்கிலாந்து
2️⃣ ஞானாம்பாள் & யோகேஸ்வரன்
• இலங்கை
3️⃣ ஜெகதாம்பாள் † & செல்வராஜா
• பிரான்ஸ் • மகள்கள்: அஸ்வினி, சிவாஜினி
4️⃣ கிரிசாம்பாள் & கிருஸ்ணசாமி †
• இலங்கை
5️⃣ சுந்தராம்பாள் & சுப்பிரமணியம்
• இலங்கை
6️⃣ ஶ்ரீ கந்தராஜா + குடும்பம்
• கனகராஜன்குளம்
7️⃣ ஸ்ரீ சந்தணராஜா + குடும்பம்
• சங்கானை
8️⃣ ஸ்ரீ சௌந்தர்ராஜா & பாமினி + குடும்பம்
• ஜேர்மனி • பிள்ளைகள், மருமகன், பேரன்
9️⃣ ஶ்ரீ நவரத்னராஜா (ராஜா) + குடும்பம்
• நெதர்லாந்து • பிள்ளைகள்: Caspar, Anna Vera, Donnah

🌟
இந்த நினைவு மலர் அர்ப்பணிக்கப்பட்டது Ce livre commémoratif est dédié à This memorial book is dedicated to
ஜெகதாம்பாள் செல்வராஜா கந்தசாமி
(1953 - 2026)

தலையாழியின் தங்கம் • கொக்குவிலின் சுடர்

31