diff --git a/Jegathambal_Selvarajah_Memorial (2).html b/Jegathambal_Selvarajah_Memorial (2).html new file mode 100644 index 0000000..36dc1c7 --- /dev/null +++ b/Jegathambal_Selvarajah_Memorial (2).html @@ -0,0 +1,3363 @@ + + +
+ + +1953 — 2026
+கொக்குவில் சுடர் - தலையாழித் தங்கம்
+Lumière de Kokuvil — Joyau de Thalayaazhi
+Light of Kokuvil — Golden Jewel of Thalayaazhi
+ ++ Ce livre commémoratif a été créé en hommage à + Madame Jegathambaal Selvarajah Kandasamy, + née le 17 octobre 1953 à Kokuvil, Sri Lanka, + et décédée le 19 janvier 2026 à Pontoise, France, + à l'âge de 72 ans. +
+ ++ Jegathambaal était la troisième enfant d'une famille de neuf frères et sœurs — + les « Nava Manigal » (neuf joyaux) — issus d'une famille + Vishwabrahmana de Kokuvil, dans le nord du Sri Lanka. +
++ Elle a étudié à l'Université de Peradeniya (1972–1976), + où elle a obtenu son diplôme. Elle a épousé + Monsieur Selvarajah Kandasamy et + ensemble ils ont eu deux filles : Aswini et Sivajini. +
++ La famille a vécu au Sri Lanka, avant de s'établir en France + à Pontoise, près de Paris. Jegathambaal était connue pour + sa douceur, son hospitalité, et son amour profond pour sa famille. +
+ ++ Ce livre contient des hommages en tamoul de sa famille, + de ses frères et sœurs du monde entier, et de ses amis + de l'université. Les textes personnels sont en tamoul — + la langue du cœur de sa famille. +
++ 🕉️ Que son âme repose en paix 🕉️ +
++ Om Shanthi Shanthi Shanthi +
++ This memorial book has been created in loving memory of + Mrs. Jegathambaal Selvarajah Kandasamy, + born on 17 October 1953 in Kokuvil, Sri Lanka, + and passed away on 19 January 2026 in Pontoise, France, + at the age of 72. +
+ ++ Jegathambaal was the third child of a family of nine siblings — + the "Nava Manigal" (nine jewels) — from a + Vishwabrahmana family of Kokuvil, in northern Sri Lanka. + The family has deep roots in goldsmithing and Tamil tradition. +
++ She studied at the University of Peradeniya, Sri Lanka (1972–1976), + where she earned her degree. She married + Mr. Selvarajah Kandasamy and together + they had two beloved daughters: Aswini and Sivajini. +
++ The family lived in Sri Lanka before settling in Pontoise, France. + Jegathambaal was known for her warmth, hospitality, gentle nature, + and her deep and unconditional love for her family. +
+ ++ This book contains heartfelt tributes in Tamil from her family, + siblings from around the world, and university friends. + Personal poems and tributes are in Tamil — the language of + the heart of her family — with English introductions provided + throughout. +
++ 🕉️ May her soul rest in eternal peace 🕉️ +
++ Om Shanthi Shanthi Shanthi +
++ 1953 – 2026 +
+ +
+ அன்பும் அறிவும் கொண்டவள்
+ என்றென்றும் நினைவுகளில் வாழ்வாள்
+
+ Femme de sagesse et d'amour
+ Elle vivra pour toujours dans nos cœurs
+
+ A woman of love and wisdom
+ She will live forever in our hearts
+
நினைவு வசனம்
+Vers du souvenir
+A verse of remembrance
+ஜெகதாம்பாள் செல்வராசா கந்தசாமி
+இளமைக் காலம்
++ கொக்குவில் பொற்ஊற்றார் சுடர்மூச்சில் பிறந்தது இந்தக் கதை. தங்கமாம் இரும்பை இழுத்து எஃகாக்கும் கற்பனைகள் கொண்ட கரங்கள், கொக்குகள் கூடு கட்டும் தலையாழி குளத்தங்கரையில், ஞானவைரவர் கோயில் வரலாறு கட்டிய வல்லமைக் கைகள். சங்கு ஒலிக்கும் சாலைகளில், சுடர் கக்கும் தொழிற்சாலையில், இலங்கைத் தீவின் கரம்பொன் இதயமாய் துடித்தது கொக்குவில். யாழின் காதுகளில் ஒலித்தது கரம்பன் கீதம். இவ்வாறு வரலாற்றை வார்த்த வல்லமைக் கைகளின் வழித்தோன்றல்தான் ஜெகதாம்பாள். +
+ஜெகராஜா & பாக்கியலட்சுமி
+கரம்பன் வாசியும் ஜெகராஜா & தலையாழியாள் பாக்கியலட்சுமி
+
+ நவகோள் மகிழக் கண்டார் எம் பெற்றோர்
+ அறன்திறன் ஆண்டார்
+ எண்ணும் எழுத்தும் என்றும் மின்னிடும்
+ தங்கங்கள் பதக்கமாய் என்றென்றும்
+
+ நவமணிகளின் பெற்றோர்
+ கொக்குவில் கரம்பன் பாரம்பரியம்
+
+ வாழ்க்கையின் வழிகளே பிள்ளையின் கல்வியாம் +
++ கண்டெடுத்தவர்: இளைய தம்பி ராஜா +
+
+ கண்டனத்திடையே வாழும் பிள்ளை
+ கண்டனம் செய்யவே கற்றுக் கொள்ளும்
+
+ பகமையில் இடையே வாழும் பிள்ளை
+ பலரையும் எதிர்க்கப் பழகிக் கொள்ளும்
+
+ கேலிகளிடையே வாழும் பிள்ளை
+ கூச்சமும் நாணமும் கொள்ளவும் பழகும்
+
+ பொறாமையின் இடையே வாழும் பிள்ளை
+ குற்ற உணர்வு கொண்டிடப் பழகும்
+
+ சகிப்புச் சூழலில் வாழும் பிள்ளை
+ பொறுமை உணர்வு கொண்டிடப் பழகும்
+
+ ஊக்குதல் இடையே வாழும் பிள்ளை
+ தன் நம்பிக்கை தான் கொள்ளப் பயிலும்
+
+ பாரட்டுச்சூளலில் வாழும் பிள்ளை
+ நயக்குந் திறமையைத் நன்கு வளர்க்கும்
+
+ நீதியின் இடையே வாழும் பிள்ளை
+ நியாயம் புத்தியைக் கற்றுக்கொள்ளும்
+
+ ஒப்புதல் இடையே வாழும் பிள்ளை
+ தன்னை மதிக்கும் தன்மையிற் சிறக்கும்
+
+ மற்றையோர் மதித்திட நட்பில் வாழ் பிள்ளைக்கே
+ இப்புவி அன்பினால் இயங்குதல் காணுமே
+
+ கரம்பன் வாசியும் ஜெகராஜா, தலையாழியாள் பாக்கியலட்சுமி தம்பதிகள் படைத்ததொர் நல்லதோர் குடும்பம். அப்பார் மக்கள் வளர்த்தனர் கல்வியால் வழாக கடாட்ஷம், யாழ்பாணத்தின் தலையாழியில் உதித்தது நவகிரகள் குடும்பம். மலர்ந்தன ஐம்பாள் விருட்ஷம் உந்திப்பற, நால்மறை காத்திட ஶ்ரீமார் பலம், கவச குண்டலங்களும் கைகூடும் நிமலரடி ஶ்ரீமார் கவசம் தனை. +
++ மனையில் உதித்தது ஓர் பல்கலைக்கழகம். நவகோள் மகிழக் கண்டார் எம் பெற்றோர். அறன்திறன் ஆண்டார் அவதரித்த எண்ணும் எழுத்தும் என்றும் மின்னிடும் தங்கங்கள் பதக்கமாய் என்றென்றும். இவ்வாறு நவமணிகள் நவகோள் வரிசையாக உதித்தனர்: +
+
+ தேவகுஞ்சராம்பாள் • ஞானாம்பாள் • ஜெகதாம்பாள் • கிரிசாம்பாள் •
+ ஶ்ரீ கந்தராஜா • ஶ்ரீ சந்தணராஜா • சுந்தராம்பாள் •
+ ஶ்ரீ சௌந்தர்ராஜா • ஶ்ரீ நவரத்னராஜா
+
+ குடும்ப வரிசையில் மூன்றாவது மகளாக, 1953 இல் பிறந்தார் ஜெகதாம்பாள். 1956 இல் மூன்றாம் வயதில் வித்தியா ஆரம்பம், திருவாளர் திரவியம் ஆசிரியர் தொடக்கி வைத்தார். 1957, 1958, 1959 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பெரியபுலம் மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையில் அரிவரி தரம் 1, தரம் 2 கற்றார். +
++ 1960, 1961 இல் கரம்பொன் சிறுவர் பூ கூடம் (லிட்டில் பிளவர் கான்வென்டில்) 3ஆம் தரமும், கிழக்கு மட தமிழ் பாடசாலையில் 4ஆம் தரமும் கற்றார். 1962 முதல் 1970 வரை மீண்டும் பெரியபுலம் மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையில் தரம் 4 தொடக்கம் தரம் 11 வரை கற்றார். தமிழர் பண்பாட்டின்படி தரம் 10, 11 துண்டு தாவணி அணிந்து கல்வியைக் கற்று வந்தார். +
++ 1970 முதல் 1973 வரை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கலைப் பாடநெறியில் கற்று மிகத் திறமையான பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகக் கல்விக்கு சென்றார். இங்கு சிறந்த பேச்சாளராக விளங்கி, கொக்குவில் இந்துக் கல்லூரி "இராச சந்திரா" பேச்சுப் போட்டியில் பல தங்கப் பதக்கங்களையும் பெற்றிருந்தார். தமிழ்த் தினப் போட்டிகளிலும் பரிசில்கள் பெற்றிருந்தார். +
++ 1974, 1975, 1976 ஆண்டுகளில் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தில் கற்று சிறந்த பெறுபேற்றைப் பெற்றார். பின்னர் கொழும்பில் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புள்ளிவிவரவியலாளராக கடமை ஆற்றினார். +
++ 1989, 1990களில் திரு செல்வராசா அவர்களுடன் திருமண பந்தத்தில் கலந்து பிரான்ஸ் நாட்டினில் வாழும் காலத்தில் அஸ்வினி, சிவாஜினி என இரு பெண் குழந்தைகளைப் பெற்று இற்றைவரை வாழ்ந்து வந்தார். +
++ ஜெகதாம்பாள் அழகும் அறிவும் செம்மையும் கொண்டவராக வாழ்ந்தது மட்டுமன்றி, கற்பித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உற்றார் உறவினருடனும், பெரியோர்களுடனும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். சகோதர பாசத்திலும் குறை கூற முடியாது. +
++ இவ்வாறு இரவும் பகலும் மனைக்கலைக்கு ஜோடியாக, விதிஅமைத்த வீதிகளில் கைவினைக் கீதம் பாடி, வரலாறு எழுதிய வண்ணத் தமிழர்கள் வரிசையில் ஜெகதாம்பாள் நீரும் ஆவீர். +
++ தற்பொழுது 19.01.2026 இல் இயற்கை எய்தி நீள் துயில் கொண்டுள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம். +
+வாழ்க்கை படங்கள்
++ திருமண விழா +
++ குடும்ப மகிழ்ச்சி +
++ அன்பு நிறைந்த குடும்பம் +
++ இளமைக் காலம் +
++ நெதர்லாந்து – துலிப் தோட்டத்தில் +
++ கடற்கரையில் குடும்பத்துடன் – Zee, நெதர்லாந்து / பெல்ஜியம் +
+
+ வாழ்வின் ஒவ்வொரு கணமும்
+ நினைவுகளாக நீடிக்கும்
+
அன்பு கணவர்
+Époux bien-aimé
+Beloved Husband
++ என்றும் அன்பும் பாசமும் நிறைந்த ஜெகா… எங்கு சென்றீர்கள்? நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததையெல்லாம் சுட்டிக்காட்டினீர்கள். ஆனால் அதையெல்லாம் செய்ய வைக்க முடியவில்லை உங்களுக்கு. உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று நினைத்துவிட்டு, எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டீர்களா? +
++ தாயே… நீங்கள் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பீர்கள். எழுதப்பட்ட விதி நிறைவேறிவிட்டது. +
++ 19-01-2026 +
++ உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். +
++ கணவரின் இதயத்திலிருந்து +
++ Jega, toujours remplie d'amour et d'affection… où es-tu partie ? Tu as évoqué tout ce que tu voulais accomplir. Mais tu n'as pas pu réaliser tout cela. As-tu pensé que personne ne te comprenait, et nous as-tu quittés pour cette raison ? +
++ Mère… si tu étais restée, tu aurais vécu heureuse. Le destin écrit s'est accompli. +
++ 19-01-2026 +
++ Je prie Dieu pour que ton âme trouve la paix. +
++ Du cœur de ton époux +
++ Jega, forever filled with love and affection… where have you gone? You pointed out everything you wanted to do. But you couldn't make it all happen. Did you think no one understood you, and leave us because of that? +
++ Mother… if you had stayed, you would have lived happily. The written destiny has been fulfilled. +
++ 19-01-2026 +
++ I pray to God that your soul may find peace. +
++ From your husband's heart +
++ செல்வராஜாவின் கையெழுத்துக் கடிதம் + Lettre manuscrite de Selvarajah + Selvarajah's handwritten letter +
++ கணவரின் இதயத்திலிருந்து... + Du cœur d'un mari... + From a husband's heart... +
+அன்பு மகள்கள்
+Filles bien-aimées
+Beloved Daughters
++ உங்கள் அன்பு மகள் சிவாஜினி, செல்ல மகள் அஸ்வினி எழுதுகிறோம். +
++ நீங்கள் ஒரு அன்புள்ள, பாசமுள்ள எங்களுக்குத் தாயாகவும், + அக்கறையான அப்பாவுக்கு மனைவியாகவும் + இருந்தீர்கள்... இருக்கின்றீர்கள்... இருப்பீர்கள்... +
++ நன்றி அம்மா. +
++ எங்கள் மனதில் எப்போதும் இருப்பீர்கள். +
++ கடவுளிடம் சென்றீர்கள். அமைதியோடு இளைப்பாறுங்கள். +
+
+ அன்புடன்,
+ சிவாஜினி, அஸ்வினி
+ மற்றும் கணவர் செல்வராஜா
+
+ Tes gentilles deux filles, Sivagini et Aswini, t'écrivent. +
++ Tu es une aimante et affective maman, et aussi + une bienveillante épouse pour papa K. Selvarajah... + Tu l'étais, tu l'es et tu le seras tout le temps. +
++ Merci maman. +
++ Tu seras toujours dans notre cœur. +
++ Tu es partie à Dieu. Sois en paix. +
+💐
+
+ Avec amour,
+ Sivagini, Aswini
+ et papa Selvarajah
+
+ Your loving daughters, Sivagini and Aswini, write to you. +
++ You were, are, and will always be a loving and affectionate + mother to us, and a caring and devoted wife to papa K. Selvarajah... +
++ Thank you, Amma. +
++ You will always live in our hearts. +
++ You have gone to God. Rest in peace. +
+
+ With love,
+ Sivagini, Aswini
+ and husband Selvarajah
+
குடும்ப நண்பர்கள்
+Amis de la famille
+Friends of the family
++ « Puisse ta maman reposer en paix sans souffrance et qu'elle veille sur toi et ta famille. Nous prions pour le repos de son âme. » +
+🕊️
++ Sébastien & Deborah +
++ உங்கள் அம்மா துன்பமின்றி அமைதியாக இளைப்பாறட்டும், அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றட்டும். அவரது ஆத்மா அமைதி பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம். +
+🕊️
++ Sébastien & Deborah +
++ "May your mother rest in peace without suffering and may she watch over you and your family. We pray for the peace of her soul." +
+🕊️
++ Sébastien & Deborah +
+நவமணிகளின் நினைவுகள்
+ + + ++ ஜெகராஜா குடும்பம் - நவமணிகள் +
+
+ தேவகுஞ்சராம்பாள்† • ஞானாம்பாள் • ஜெகதாம்பாள்† • கிரிசாம்பாள் •
+ ஶ்ரீ கந்தராஜா • ஶ்ரீ சந்தணராஜா • சுந்தராம்பாள் •
+ ஶ்ரீ சௌந்தர்ராஜா • ஶ்ரீ நவரத்னராஜா
+
மூத்த சகோதரி
+கணவர்: மனோகரன் †
+ +
+ நின்று (இடமிருந்து வலம்):
+ கிரிசாம்பாள் • அம்மா •
+ தேவகுஞ்சராம்பாள் † •
+ சுந்தராம்பாள் (நடுவில்) •
+ ஜெகதாம்பாள் † •
+ ஞானாம்பாள் •
+ ஶ்ரீ சந்தணராஜா • ஶ்ரீ கந்தராஜா
+
+ உட்கார்ந்து (இடமிருந்து வலம்):
+ ஶ்ரீ நவரத்னராஜா • ஶ்ரீ சௌந்தர்ராஜா
+
+ 📍 அம்மாவின் தலையாழி வீடு • சுந்தராம்பாளின் பூ புனித நீராட்டு வைபவம்
+ ✨ நவமணிகள் 9 பேரும் + அம்மா — ஒன்றாக!
+
+ விண்ணேற்று: 2019
+ இங்கிலாந்து
+
+ கணவர்: திரு கசிப்பிள்ளை மனோகரன் †
+ (விண்ணேற்று: 2025, இங்கிலாந்து)
+
+ ஓம் சாந்தி சாந்தி சாந்தி +
+ +2வது அன்புச்சகோதரி
+கணவர்: யோகேஸ்வரன்
+
+ ஞானாம்பாளின் கையெழுத்து கடிதம்
+ 25.01.2026
+
+ குரல் பதிவு +
++ ஞானாம்பாளின் குரலில் இந்த கடிதம் +
+ ++ ஞானாம்பாளின் கையெழுத்துக் கடிதம் • 25.01.2026 + Lettre manuscrite de Gnanambal • 25.01.2026 + Gnanambal's handwritten letter • 25.01.2026 +
++ அக்காவின் அன்பு நினைவுகள் +
+4வது அன்புச்சகோதரி
+கணவர்: கிருஸ்ணசாமி†
+
+ அனைவருடனும் அன்பாக இருக்க விரும்பிய ஜெகதா அக்கா
+ ஆசையாக இரு பெண் பிள்ளைகளை வளர்த்த அக்கா
+ இன்பமாக கணவருடன் சேர்ந்து வாழ்ந்த அக்கா
+ ஈசன் திருவடிகளை அடையச் சென்ற அக்கா
+ உங்கள் கல்விப் பெருமைகள் பலதே அக்கா
+ ஊரார் போற்ற ஒரு காலத்தில் வாழ்ந்தீர் அக்கா
+ எங்கள் சகோதரியே ஜெகதாம்பாள் அக்கா
+ ஏன் எங்கள் யாவரையும் தவிக்க விட்டீர் அக்கா
+ ஐங்கரனின் தம்பி வேலனை வணங்கி மகிழ்ந்த அக்கா
+ ஒன்பது கிரகங்களாக நாம் திசை பிரிந்தோம் அக்கா
+ ஓம் என்ற ஒலியாக ஒன்று சேர்வோம் அக்கா
+ ஔவை மொழியாம் "ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி"யில்
+ உயர்வாய் எங்கள் அக்கா
+ ஃ ஆயுத எழுத்தாம் "வேலாயும்" கொண்ட பெருமானிடம்
+ கலந்து மகிழ்வாய் எங்கள் மூன்றாவது அக்கா.
+
+ கிரிசாம்பாளின் கையெழுத்து +
+சுபம்
+
+ உங்கள் சகோதரி,
+ கிருஸ்ணசாமி கிரிசாம்பாள்
+ இலங்கை
+
5வது சகோதரன் (பெரிய தம்பி)
++ பாசமும் நேசமும் கொண்ட ஜெகதா அக்கா பல்கலைக்கு கண்டியும், தொழிலுக்கு கொழும்பென்றும், பின்னும் குடும்ப வாழ்வுக்காக பிரான்ஸ் நாடென்றும் சென்றீர் - எனினும் +
+ ++ அன்றிருந்த நிலை மாறி இன்று என் நிலை கண்டு இரக்கம் கொண்டீர். தொலைபேசியில் பேசியும், ஆறுதல் வார்த்தைகளும் கூறிவந்தீரே. +
+ ++ குடும்பமாக இலங்கை வந்தாலும் என் நிலை கண்டு பல உதவிகள் செய்தீர்களே +
+ ++ இவற்றை எண்ணும் போது எப்படி உங்களை மறப்பேன்? +
+ ++ உங்கள் அறிவு தகுதிக்கும் ஆழ்ந்த ஆளுமைக்கும் பெருமைப்பட்டேன். புகழ் பூத்து வாழ்ந்திருந்தேன். எம் அன்னை அடிக்கடி கூறுவார் +
+ ++ "எப்பிறப்பும் கிடைக்கும், ஆனால் சகோதரப் பிறப்பு கிடைக்காது" +
++ "வாழும் கால் மகிழ்ந்திருங்கள்" +
++ என்றும் கூறுவது நினைவில் வருகிறது +
++ இன்றோ நாம் இனிமேல் பார்க்க முடியாதபடி நீள்தூரம் சென்றது ஏனோ? அக்கா… ! +
+ ++ ஜெகம் ஆளப்பிறந்த ஜெகதாக்காவே அவசரமாய் விண்ணுக்கு ஏகியது ஏனோ? பேசிய வாயும் ஓய்ந்து விட்டதே வாழ்ந்திடுவீர் அவ்வுலகில் தெய்வீகமாக வாழ்த்துகின்றேன் எனும் +
+ +
+ அன்புடன்
+ பெரிய தம்பி,
+ ஜெகராஜா ஶ்ரீ கந்தராஜா + குடும்பம்
+ கனகராஜன்குளம்
+
6வது சகோதரன் (சின்ன தம்பி)
+
+ "எனக்கொரு அன்னை படைத்தவள் உன்னை
+ அவள் பெயர் ஜெகதாம்பாள்"
+
+ அமரர் செல்வராசா, தெய்வத்திரு ஜெகதாம்பாள் என் சகோதரி புவியில் தோன்றி மறைந்த பெருமையின் புகழ் காண்பீரோ! +
+ ++ பெற்றவர் தமக்கு பெருமை தந்திட கல்வியில் சிறந்தாயே. +
+ ++ மற்றவர் மதிபெற கற்றவர் தமக்கெல்லாம் தானும் ஒருவராய் திகழ்ந்தாயே. +
+ ++ இதிகாச வரலாறும் இறையருள் பெருமைகளும் பிறர் அறிந்திட (பாவாடை) புத்தகம் தரித்தாயே. +
+ ++ கல்வியின் சிறப்பு மேடைகளில் பேச்சுரையாற்றி தங்கப்பதக்கங்கள் பெற்றாயே. +
+ ++ இத்தனையும் பெற இறைவனை வேண்டி பகல் இரவெல்லாம் கண்விழித்து புத்தகம் படித்தாயே. +
+ ++ சமையல் செய்வது ஒரு புறம், கட்டுரை எழுதி படிப்பது ஒரு புறம் என்றெல்லாம் கற்றதன் பயனென பல்கலைக்கழகம் சென்று உயர் பேற்றினை பெற்று கல்விக்கு அதிபதி கலைமகள் மகிழ்ந்திடும் வரிசையில் இருந்தாயே. +
+ ++ மற்றவர்களும் கல்வியில் சிறந்திட மதிவளர் பேச்சுரையாளராக பதவிகள் வகித்தாயே. +
+ ++ நியமனப்பணியென்று அரச சேவையான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறையில் பணிபுரிந்தாயே. +
+ ++ தாய் சகோதரர்களுக்கும் உற்றாருக்கும் தான் பெற்ற கல்வியிலும் உழைப்பின் நிதியிலும் உதவிகள் பகிர்ந்தாயே. +
+ ++ இன்பமும் துன்பமும் இளமையும் முதுமையும் பெருமையும் உனதென இறைவன் வகுத்த திருமண நாள் கண்டு உற்றார் ஊரார் போற்ற திருமாங்கல்யதாரண விழா கண்டு கணவரிடம் அந்நிய நாடு சென்று வாழ்ந்த மகிழ்வினில் அஸ்வினி சிவாஜினி இரு மகளையும் பெற்றாயே. +
+ ++ தன் பிள்ளைகளும் கணவரும் தன் குடும்ப செல்வங்கள் என்றும் தெய்வங்கள் என்றும் அவர்களின் உயர்வுக்கும் வாழ்வுக்கும் உறுதுணையாய் இறுதிவரை வாழ்ந்து இறைவனடியில் யாவற்றையும் ஒப்புவித்து மறைந்த பெருமை உமக்கு உரியது அக்கா. +
+ ++ பிழை பொறுக்கும் ஒரு தாயாக என் சகோதரியாக என் பிழை இருப்பின் அதை பொறுத்தருள வேண்டுகிறேன். +
+ ++ வாழ்ந்து மறைந்த வரலாற்றில் உம்மையும் ஒரு காவியமாய் கற்றோர்கள் சபை ஏற்றிருக்கும் உமது ஆன்மாவை இறைவன் தன் தாழ் சேர்த்திருப்பார். +
+ ++ ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! +
+ ++ ஶ்ரீ சந்தணராஜாவின் கையெழுத்து +
++ குரல் பதிவு +
++ ஶ்ரீ சந்தணராஜாவின் குரலில் +
+ +
+ அன்புடன்
+ சின்ன தம்பி
+ ஜெகராஜா ஸ்ரீ சந்தணராசா + குடும்பம்
+ சங்கானை
+
+ வாழ்ந்து மறைந்த வரலாற்றில் உம்மையும் ஒரு காவியமாய்
+ கற்றோர்கள் சபை ஏற்றிருக்கும்
+
+ ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! +
+7வது அன்புச்சகோதரி
+7ème sœur bien-aimée
+7th beloved sister
++ கணவர்: மகேஸ்வரன் † + Époux : Maheswaran † + Husband: Maheswaran † +
++ அன்புச்சகோதரி ஜெகதாக்காவுடன் வாழ்ந்த காலம்... +
+ ++ மூத்த செல்வத்தை இழந்து அடுத்து உமை இழந்து விட்டோம். +
+ ++ அன்று அம்மாவுடன் வாழ்ந்த காலத்தில் எனது கல்வியில் அக்கறை செலுத்தி ஒவ்வொரு பேச்சுப்போட்டிகளிலும் நின் போல் என்னையும் முதலிடம் பெறச்செய்து படிப்பில் உயர்த்தி வைத்ததை மறப்பேனோ? +
+ ++ நான் பல்கலைக்கழகம் செல்லாவிட்டாலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உம்முடன் விடுதியில் வாழ்ந்ததை மறப்பேனோ? +
+ ++ இன்றும் அழியா நினைவாக இருக்கிறது உங்களுடன் வாழ்ந்த காலம். +
+ + + ++ — அன்புடன், மகேஸ்வரன் சுந்தராம்பாள் +
+8வது சகோதரன்
8ème frère
8th Brother
++ மனைவி: பாமினி • பிள்ளைகள் • மருமகன் • பேரன் +
+ஜேர்மனி
+
+ ஒர் தாய் வயிற்றினில் நவமணிகளாய் உதித்தோம் நாம்
+ ஊர் போற்றும் சகோதரராய் வாழ்ந்தோம் நாம்
+ அன்பிற்கு இலக்கணமாய் பண்புடைமை காத்து
+ பக்குவமாய் எமை நீர் வழிநடத்தினீர்
+ அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும்
+ பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும்
+ கல்வியில் முன்மாதிரியாய் இருந்தீரே ஜெகதா அக்கா நீர்
+ விதியால் நாம் பிரிந்திருந்தும் விலகிநின்றும் இணைந்திருந்தோமே,
+ கண்முன்னே வாழ்ந்தகாலம் கனவாகிப்போனாலும்
+ மண்விட்டு மறைந்து ஆண்டவனிடம் நீர்சேர்ந்தாலும்
+ கண்விட்டு மறையாமல் என் மனதினில் நீர் இருப்பீர்
+ மீண்டும் ஒர் பிறப்புண்டெனில் சகோதரராய் பிறந்து
+ நாமும் இணைபிரியாது வாழ்ந்திட ஆண்டவனை தொழுவேன்
+
+ அன்புடன் அப்பு
+ ஜெகராஜா ஸ்ரீ சௌந்தர்ராஜா + குடும்பம்
+ மனைவி பாமினி
+ பிள்ளைகள், மருமகன், பேரன்
+ ஜேர்மனி
+
+ ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! +
+மைத்துனி • ஸ்ரீ சௌந்தர்ராஜாவின் துணைவி
Belle-sœur — épouse de Sri Sundararajah
Sister-in-law — wife of Sri Sundararajah
+ஜேர்மனி
+
+ ஜெகதா அக்கா. ஜெகதா அக்கா.. என
+ உமை அழைத்த என் நாவு இனி யாரை அழைக்குமோ..
+ உங்கள் சாந்த முகத்தை இனி நாம் எங்கு தேடுவதோ
+ நாங்கள் வீட்டுக்கு வந்த வேளை எம்மை அன்புடன் அரவணைத்து
+ உணவளித்து உபசரித்தமையை இனி எங்கு காண்பேனோ...
+ நோய் வந்த போதிலும் இன்முகத்துடன் கதைத்தீரே
+ உமை படைத்தவரே அழைத்துக் கொண்டாரே...
+ உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகிறோம்
+ ஜெகதா அக்கா.
+
+ அன்புடன்,
+ பாமினி
+ ஜேர்மனி
+
+ ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! +
+9வது சகோதரன் (இளைய தம்பி)
9ème frère (le plus jeune)
9th Brother (youngest)
+🌺 நினைவு மலர் – சிறப்பு பக்கம் 🌺
+
+ அர்ப்பணம் – அன்பு சகோதரன் ராஜா (Sri)
+ இதயத்தின் மொழியில்
+
(1)
+
+ துயில் கண்டு எழுந்திடுவீர், எம்பால் சோதரியே,
+ விழி திறந்து காண்க நீர், எஞ்சிய பாச உலகை.
+ கவி ஏறும் எழுத்தாற்றல் கடலாய்த் திரண்டெழுவீர்,
+ கலைமகளே — அதுவும் உம் கை வசமே.
+ உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.
+
(2)
+
+ கூப்பிட்ட குரல் எங்கே? ஆறாதது குறை யாது?
+ உரைக்க வந்த வார்த்தைகள் உறையுண்டு நின்றனவோ?
+ ஏற்று வந்த கடமையெல்லாம் தீர்க்க அவன் உண்டே,
+ ஆர் அறிவார் அவ்வுருவை?
+ உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.
+
(3)
+
+ கூப்பிய உம் கரங்கள் கண்டேன் — வாயடைத்த பாவை;
+ உம் பாசமே நான் கண்டேன். வினை கொண்ட உறவு எமக்கு,
+ கடன் பரிந்தீர், எம் பாசக் கயிற்றுக்கு திதி கூடி இணைந்தாய்.
+ பாவி நான் பரமனிடம் பரிந்துரைக்க ஏதுண்டோ? மன்னித்து ஏற்பீரோ?
+ உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.
+
(4)
+
+ காலனிட்ட கணக்குக்குக் குறையுண்டோ? பூரணமே.
+ இதனை உரைக்க நீர் அருகில் துணை நிற்பீர் உம் வாரிசுடன்.
+ எவர் உற்றார் இக்குலத்தில் இதை மறுக்க?
+ பரம்பொருளே பாதிப்பான் இத்தடை விதிக்க.
+ உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.
+
(5)
+
+ உடல் நீராய், தீயாய், காற்றாய், மண்ணாய், ஆற்றில் மீண்டது —
+ ஆனால் அன்பும் நினைவும் கரையாதே.
+ பரமனவன் பாத்திரத்தில் அவதாரம் — இனியும் பல பகிர்வுண்டு.
+ உத்தமி ஜெகதாம்பாள், எம்பாவாய்.
+
+ இது குற்றமல்ல — இயற்கையின் விதி.
+ நான் மனிதன்; எனக்கு இதயம் உண்டு.
+ அன்பின் மொழியில் எழுந்த இந்த அழைப்பு
+ அவரின் ஆத்மா ஒளியடைய வழி செய்யட்டும்.
+
+ 🕉️ ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🕉️ +
+
+ அன்புடன் சின்ன ஶ்ரீ
+ ஜெகராஜா ஶ்ரீ நவரத்னராஜா + குடும்பம்
+ நேதர்லாந்து
+
விதியின் அறிவிப்பு
+ + +
+ காலவிதி கணக்கைச் சொல்லிடத் தீதிது;
+ படைசேர்ந்த தலையாழிப் பாவையே
+
+ விசுவாவசு ஆண்டுத் தைத் திங்களில்,
+ ஐந்தாம் நன்னாளில்,
+ உத்தராட நட்சத்திர
+ தை வளர்பிறையாம் பிரதமை என்னும் திதியினில்
+
+ பிரான்ஸ் நாட்டினில் ஈராறு மணிக்குள் +
+ +
+ செல்வராஜாவின் வாழ்க்கைத் துணைவியாம்
+ ஜெகதாம்பாள்
+ சுமங்கலியாக எழுபத்திரண்டாம் அகவையில்
+ நீத்தாள் இவ் வையகத்தை விட்டு
+
+ இறைவனின் திருப்பாதம் காண
+ சென்றாளாம் அங்கு
+
+ 19 ஜனவரி 2026
+ செவ்வாய்க்கிழமை
+ பிரான்ஸ்
+
+ ஓம் சாந்தி சாந்தி சாந்தி +
+Former partner of Sri Navaratnarajah
++ My memory is when your family visited our campingplace near Dieppe along the seaside. Driving around to find a B&B for the weekend, we spotted a wild boar (pig) in the fields. Immediately you decided to return to Pontoise. Although you seemed to enjoy the countryside, you were too much a city girl. +
++ Another memory is when we visited your house as a family. One time you were very generous to encourage me to join the 14th july fireworks in Pontoise, which were spectacular reflecting in the river. +
++ While you stayed at home ironing clothes for Babitha's wedding the next day. +
++ I am sorry to have been informed about your passing. +
++ For yourself that you passed away a little too early. That you are no longer able to accompany your daughter's lives and be together with your partner. +
++ I hope you have lived a fulfilling live in trust that your memory will help your relatives to continue. +
+
+ Astrid
+ Nederland
+
பேரக்குழந்தைகள்
+Petits-enfants
+Grandchildren
++ நவரத்னராஜா (ராஜா) குடும்பம் + Famille de Navaratnarajah (Rajah) + Family of Navaratnarajah (Rajah) +
+
+ டொனாவின் ஓவியம்
🦋 வண்ணத்துப்பூச்சி • 🌸 பூ • 🕊️ பறவைகள்
+ Dessin de Donnah
🦋 Papillon • 🌸 Fleur • 🕊️ Oiseaux
+ Donnah's drawing
🦋 Butterfly • 🌸 Flower • 🕊️ Birds
+
+
+ ஒரு பேரக்குழந்தையின் அன்பு,
+ வண்ணங்களில் வெளிப்பட்டது.
+ பாட்டியின் நினைவுகள்,
+ என்றென்றும் பூத்திருக்கும்.
+
+
+ L'amour d'une petite-fille,
+ exprimé en couleurs.
+ Les souvenirs de grand-mère,
+ fleuriront pour toujours.
+
+
+ A granddaughter's love,
+ expressed in colors.
+ Grandmother's memories,
+ will bloom forever.
+
+
+ As children, there were many summers where on our family holiday trips through France we would stop to visit our auntie Jegatha. We would talk with our cousins, or go on a walk outside. One time we all went together into Paris to see the city which is a memory we both think of fondly. +
++ We will dearly miss our aunt Jegatha, and we wish our uncle, Selva and our cousins Asvini and Sivagini strength and kindness in these difficult times. +
++ Our heartfelt condolences, +
++ எம் அன்பு ஜெகதா பெரியம்மா, +
++ உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் எங்கள் வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கும். +
++ உங்கள் நினைவு எங்கள் இதயங்களில் என்றும் வாழும். +
+
+ உங்கள் மருமட்கள்,
+ Caspar, Anna Vera & Donnah Sagarajah
+
+ Quand nous étions enfants, il y avait beaucoup d'étés où, lors de nos vacances familiales en France, nous nous arrêtions pour rendre visite à notre tante Jegatha. Nous parlions avec nos cousins ou nous faisions une promenade dehors. Une fois, nous sommes tous allés ensemble à Paris pour voir la ville, un souvenir que nous chérissons tous. +
++ Notre tante Jegatha nous manquera beaucoup, et nous souhaitons à notre oncle Selva et à nos cousines Asvini et Sivagini force et bienveillance en ces moments difficiles. +
++ Nos sincères condoléances, +
++ Caspar, Anna Vera & Donnah Sagarajah +
++ நெதர்லாந்து + Pays-Bas + The Netherlands +
+Friends & Batchmates
+Amis et Camarades de Promotion — Université de Peradeniya 1972–1976
+Friends & Batchmates — University of Peradeniya 1972–1976
+ +
+ பேராதனை பல்கலைக்கழகம்
+ University of Peradeniya
+ 1972 — 1976
+
+ நட்பு என்றென்றும்
+ Friendship Forever
+
அன்புத் தோழி - பல்கலைக்கழக நண்பர்
+Amie chère - Camarade universitaire
+Dear Friend - University Companion
++ என அருமைத் தோழியே எங்கு தான் சென்றீரோ. ஜெகதா என்று உம்மை இனி நான் எப்போ அழைப்பேன். ஜெகதா, ஜெகதா என்று பதறி நான் துடிப்பது உம் காதில் கேட்கிறதா ஜெகதா. +
+ ++ 1972ம் ஆண்டு மே மாதம் எமது பல்கலைக்கழக வாழ்வைத் தொடங்குகையில் பேராதனையில் நான் உம்மை சந்தித்தேன். நாம் பன்னிரண்டு தோழிகள் சங்கமித்தா விடுதியில் மிக சுதந்திர பறவைகளாக சேர்ந்திருந்தோம். சிங்கார வாழ்வு வாழ்ந்தோம். நான்காம் ஆண்டு நானும், நீரும், நிரஞ்சனாவும் Economics and Statistics ஒன்றாக படித்தோம். அப்போ நாம் மூவரும் கண்டி செல்வது, குறிஞ்சி குமரன் சென்று தரிசிப்பது, வெளியே சென்று சாப்பிடுவது, குழுவாய் இருந்து படிப்பது என்று மிக மகிழ்ச்சியாக இருந்தோம். +
+ ++ உமது அமைதியான புன்சிரிப்பும், ஆழ்ந்த சிந்தனை கொண்ட கனிவு மொழி பேசும் கள்ளமில்லா வெள்ளை மனமும், புன்னகை பூத்த முகமும் இன்றும் பசுமரத்தாணி போல் எனது மனதில் ஆழமாக பதிந்து நிற்கிறது. +
+ ++ 1976ம் ஆண்டு பல்கலைக்கழக படிப்பு முடிந்த பின் அவ் வருடம் மார்கழியில் எனது திருமணத்திற்கு நீர் வந்த போது சந்தித்தேன். அதன்பின் நான் UK வந்தபின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது. காலங்கள் கரைந்தோடி விட்டன. +
+ ++ 2019ம் ஆண்டு Lockdown போது உலகமே ஸ்தம்பித்து நின்றது. அப்போது நான் வீட்டில் இருந்து என் பல்கலைக்கழக தோழர்கள், தோழியரை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அவ்வேளை நீர் உமது தமக்கையின் மரணச் சடங்கிற்கு UK வரும் போது உம்மை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் எமது பல்கலைக்கழக நண்பர்கள் கிட்டத்தட்ட ஐம்பது பேரை WhatsApp மூலம் சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் எல்லோரும் எமது வாழ்க்கையைப் பகிர்ந்து மேலும் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். +
+ ++ அடிக்கடி தொலைபேசியில் நலம் விசாரித்து நாட்டு நடப்பு முதல் வீட்டு புதினம் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். ஜெகதா, நீர் என்னோடு கதைக்க எடுக்கும் போது நான் ஏதும் வேலையிலிருந்து தொலைபேசியை எடுக்காவிடில் உடனே என் கணவரின் தொலைபேசிக்கு அடித்து அவருடன் கதைப்பீர். அப்படி நாம் உமது குடும்ப நண்பர்களாகவே மாறிவிட்டோம். +
+ ++ 2025 மார்கழி கடைசியில் மருத்துவமனையில் இருந்து நீர் என்னோடு கடைசியாக கதைத்தீர். என்னை புது வருடத்திற்கு வீட்டுக்கு விடுவார்களோ தெரியாது எனக் கூறினீர். கடந்த இரண்டு வருடங்களாக நீர் உடம்பில் பல உபாதைகளால் கஸ்டப்பட்டது எமக்கு தெரியும் ஜெகதா. ஆனால் இவ்வளவு கெதியில் கடவுள் உம்மை கூட்டிப் போவார் என நாங்கள் எதிர் பார்க்கவில்லை. +
+ ++ உமது உயிர் பிரிந்தாலும் உமது நினைவுகளை யாராலும் எங்களிடமிருந்து பறிக்க முடியாது. உமது அன்பான வார்த்தைகளையும், அறிவு பூர்வமான பகிடிகளையும் கேட்க முடியாதே என ஏங்கி நிற்கிறோம். +
+ ++ நீர் செல்வாவிற்கு ஒரு நல்ல மனைவியாகவும், அஸ்வினி, சிவாஜினிக்கு நல்ல தாயாராகவும் இருந்தீர். நீர் எங்கிருந்தாலும் உமது ஆன்மா அவர்களை நன்றாக வழி நடத்தும் என நம்புகிறேன். +
+ +
+ "அன்பு ஈனும் ஆர்வம் உடமை அது ஈனும்
+ நண்பு என்னும் நாடாச் சிறப்பு"
+
+ அன்பு பிறரிடம் விருப்பத்தை உண்டாக்கும். அவ்விருப்பம் எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் பெரும் சிறப்பைத் தரும். அதை உமது வாழ்வில் நீர் கடைப்பிடித்தீர் ஜெகதா. +
++ உமது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். +
+ +
+ அன்புத் தோழி
+ சுகேந்திரா தர்மகுமார்
+
+ Ma chère amie, où es-tu partie ? Quand pourrai-je à nouveau t'appeler Jegatha ? Est-ce que tu entends mes appels désespérés - Jegatha, Jegatha ? +
+ ++ Je t'ai rencontrée à Peradeniya en mai 1972, au début de notre vie universitaire. Nous étions douze amies au foyer Sangamitta, vivant comme des oiseaux libres. Nous avons vécu une vie magnifique. En quatrième année, toi, moi et Niranjana avons étudié ensemble Economics and Statistics. Nous allions à Kandy, visitions Kurinji Kumaran, mangions dehors, étudions en groupe - nous étions si heureuses. +
+ ++ Ton sourire paisible, ta parole douce emplie de pensées profondes, ton cœur pur sans malice, ton visage radieux - tout reste gravé profondément dans mon cœur comme un clou vert. +
+ ++ Après nos études en 1976, je t'ai revue à mon mariage en décembre. Puis, quand je suis venue au Royaume-Uni, nous avons perdu contact. Les années se sont écoulées. +
+ ++ En 2019, pendant le confinement, le monde s'est arrêté. J'ai alors cherché à retrouver mes camarades universitaires. Quand tu es venue au Royaume-Uni pour les funérailles de ta sœur, j'ai eu la chance de te revoir. Ensuite, j'ai pu réunir près de cinquante de nos amis universitaires sur WhatsApp. Nous avons recommencé à partager nos vies et à cultiver notre amitié. +
+ ++ Nous nous téléphonions régulièrement pour partager tout - des nouvelles du pays aux histoires familiales. Jegatha, quand tu m'appelais et que je ne répondais pas parce que j'étais occupée, tu appelais immédiatement mon mari. Nous étions devenus des amis de famille. +
+ ++ Fin décembre 2025, tu m'as appelée de l'hôpital pour la dernière fois. Tu m'as dit que tu ne savais pas s'ils te laisseraient rentrer pour le Nouvel An. Nous savions que tu souffrais depuis deux ans, Jegatha. Mais nous n'avions jamais imaginé que Dieu te rappellerait si vite. +
+ ++ Même si ton âme s'est envolée, personne ne peut nous arracher tes souvenirs. Nous languissons d'entendre tes mots affectueux et tes plaisanteries pleines d'intelligence. +
+ ++ Tu as été une bonne épouse pour Selva et une bonne mère pour Asvini et Sivajini. Où que tu sois, je crois que ton âme les guidera bien. +
+ +
+ "L'amour crée l'affection et la possession
+ Cela donne la grande qualité appelée amitié"
+
+ L'amour crée le désir chez les autres. Ce désir donne la grande qualité appelée amitié. Tu as incarné cela dans ta vie, Jegatha. +
++ Je prie le Dieu tout-puissant pour que ton âme repose en paix. +
+ +
+ Ton amie affectueuse
+ Sukendira Tharmakumar
+
+ My dear friend, where have you gone? When will I call you Jegatha again? Do you hear my desperate calls - Jegatha, Jegatha? +
+ ++ I met you in Peradeniya in May 1972, at the beginning of our university life. We were twelve friends at Sangamitta Hall, living like free birds. We lived a wonderful life. In our fourth year, you, I, and Niranjana studied Economics and Statistics together. We would go to Kandy, visit Kurinji Kumaran temple, eat out, study in groups - we were so happy. +
+ ++ Your peaceful smile, your gentle speech filled with deep thoughts, your pure heart without deceit, your radiant face - all remain deeply embedded in my heart like a green nail. +
+ ++ After finishing university in 1976, I saw you at my wedding in December that year. Then, after I came to the UK, we lost touch. The years melted away. +
+ ++ In 2019, during lockdown, the world stood still. I then tried to find my university friends. When you came to the UK for your sister's funeral, I had the chance to meet you in person. Later, I was able to connect nearly fifty of our university friends through WhatsApp. We all began sharing our lives and rekindling our friendships. +
+ ++ We would regularly call each other to share everything - from country news to family stories. Jegatha, when you called me and I didn't answer because I was busy, you would immediately call my husband. We had become family friends. +
+ ++ In late December 2025, you called me from the hospital for the last time. You said you didn't know if they would let you go home for the New Year. We knew you had been suffering with many ailments for two years, Jegatha. But we never expected God would take you so quickly. +
+ ++ Though your life has departed, no one can snatch your memories from us. We long to hear your loving words and intelligent jokes. +
+ ++ You were a good wife to Selva and a good mother to Asvini and Sivajini. Wherever you are, I believe your soul will guide them well. +
+ +
+ "Love creates affection and possession
+ That gives the great quality called friendship"
+
+ Love creates desire in others. That desire gives the great quality called friendship. You embodied this in your life, Jegatha. +
++ I pray to Almighty God for your soul to rest in peace. +
+ +
+ Your loving friend
+ Sukendira Tharmakumar
+
பல்கலைக்கழக நண்பர்கள்
+Amis de l'université
+University Friends
++ பிரான்சில் ஜெகதாவின் மறைவு பற்றிய துயரமான செய்தியைக் கேட்டபோது எனது மனைவியும் நானும் மிகவும் வேதனையடைந்தோம். நவீன உலகின் தொழில்நுட்ப அதிசயங்களால், நாங்கள் தொலைவிலிருந்து அஞ்சலி செலுத்துதலையும் இறுதிச் சடங்குகளையும் பார்க்க முடிந்தது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இயலாமைக்கு இது சில ஆறுதலாக இருந்தது. +
++ திரு செல்வராஜா, அஸ்வினி மற்றும் சிவாஜினிக்கு அவர்களது ஈடுஇணையற்ற இழப்பிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அவர்களின் அன்பானவரின் அகால மறைவால் ஏற்பட்ட ஆழ்ந்த துயரத்திலிருந்து மீள நிச்சயமாக நீண்ட காலம் ஆகும். அவர்களுக்கு இதிலிருந்து விரைவில் மீள வேண்டிய உறுதியையும் தைரியத்தையும் கடவுள் அளிப்பாராக. +
++ 1973ல் இலங்கை பல்கலைக்கழகம், பேராதனையில் நான் முதன்முதலாக விரிவுரையாற்றிய கலைப் பிரிவில் ஜெகதா ஒரு மாணவியாக இருந்தார். தேர்வுகளில் உயர் மதிப்பெண்களைப் பெற்ற சிறந்த மாணவியாக இருந்தார். 4 வருட பாடநெறிக்குப் பின்னர் மிகச் சிறப்பாக பட்டம் பெற்றார். +
++ 1973க்குப் பின்னர், அவரது குழுவுடன் எனக்கு தொடர்பு இல்லை என்றாலும், ஜெகதா உட்பட அவரது குழுவிலிருந்து சிலர் குடும்ப நண்பர்களானார்கள். விடுதிகள் மூடப்பட்டபோது அவர் எங்கள் பல்கலைக்கழக குடியிருப்பில் சிறிது காலம் தங்கியிருந்தபோது நன்றாக நினைவிருக்கிறது. வீட்டு வேலைகளில் உதவுதல், சமைத்தல், எங்கள் மகளைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் குடும்ப உறுப்பினர் போல இருந்தார். எங்கள் குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டார். +
++ 1980ல் நாங்கள் பேராதனையை விட்டு சென்றபோது, அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர் எங்கு வாழ்கிறார் என்று ஆச்சரியப்பட்டோம். +
++ 2020ல், யார் அழைக்கிறார் என்று யூகிக்கச் சொன்ன ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது, ஆனால் நான் யூகிக்க முடியவில்லை. லண்டனிலிருந்து அழைக்கும் ஜெகதா என்று சொன்னபோது, அது ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு காலத்திற்குப் பிறகு அவருடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். திரு தர்மகுமாரின் அயராத முயற்சியால் இது சாத்தியமானது. +
++ அந்த நேரத்திலிருந்து அவர் என் மனைவியுடனும் என்னுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். WhatsApp-ல் பல பயனுள்ள பதிவுகளைப் பகிர்ந்தார், எங்கள் பிறந்தநாளில் வாழ்த்துகள் தெரிவித்தார். இழந்த சகோதரியுடன் மீண்டும் இணைந்தது போல இருந்தது. அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் மிகவும் வருத்தமாக உள்ளது, அவரை மிகவும் நினைவு கூர்கிறோம். +
++ மீண்டும் ஒருமுறை, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, அவரது ஆத்மா நித்திய சாந்தியில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம். +
++ Dr. C Yogachandran & Raji Akka +
++ Mon épouse et moi avons été dévastés en apprenant la triste nouvelle du décès de Jegatha en France. Grâce aux merveilles technologiques du monde moderne, nous avons pu assister à distance à la veillée et aux rites funéraires. Cela a été une certaine consolation face à notre incapacité d'assister aux funérailles. +
++ Nos plus sincères condoléances vont à M. Selvarajah, Asvini et Sivajini pour leur perte irremplaçable. Il leur faudra certainement beaucoup de temps pour surmonter la profonde douleur causée par le décès prématuré de leur être cher. Que Dieu leur accorde la force et le courage de s'en sortir bientôt. +
++ Jegatha était étudiante dans le premier groupe de lettres auquel j'ai donné des cours à l'Université du Sri Lanka, Peradeniya, en 1973. C'était une étudiante exceptionnelle qui a obtenu d'excellentes notes à ses examens. Elle a obtenu son diplôme avec brio après un cursus de 4 ans. +
++ Après 1973, bien que je n'aie pas eu de contact avec son groupe, quelques-uns, dont Jegatha, sont devenus des amis de la famille. Je me souviens bien du moment où les résidences universitaires ont fermé et où elle est restée avec nous dans nos quartiers universitaires pendant un court moment. Elle était comme un membre de la famille, aidant aux tâches ménagères, à la cuisine, s'occupant de notre fille, etc. Elle était très aimée par les membres de notre famille. +
++ Lorsque nous avons quitté Peradeniya en 1980, nous avons perdu le contact avec elle et nous nous sommes demandé où elle vivait. +
++ En 2020, j'ai reçu un appel d'une personne qui m'a demandé de deviner qui appelait, mais je n'ai pas pu deviner. Quand elle a dit qu'elle était Jegatha, appelant de Londres, ce fut une agréable surprise et nous étions si heureux de lui parler après si longtemps. Cela a été possible grâce aux efforts inlassables de M. Tharmakumar pour la localiser. +
++ À partir de ce moment, elle a été en contact régulier avec mon épouse et moi. Elle a partagé de nombreux messages utiles sur WhatsApp et nous a souhaité nos anniversaires. C'était comme retrouver une sœur perdue. Le vide laissé par son décès est très triste et elle nous manque beaucoup. +
++ Encore une fois, nous exprimons nos sincères sympathies aux membres de sa famille et prions pour que son âme repose en paix éternelle. +
++ Dr. C Yogachandran & Raji Akka +
++ My wife and I were devastated when we heard the distressing news of Jegatha's passing in France. By the technological marvels of the modern world, we were able to watch the viewing and the funeral rites remotely. This was some consolation for our inability to attend the funeral. +
++ Our deepest condolences go out to Mr Selvarajah, Asvini and Sivajini on their irreplaceable loss. It is certainly going to take a long time for them to get over the deep grief caused by the untimely death of their dearest one. May God grant them the fortitude and courage to come out of this soon. +
++ Jegatha was a student in the first Arts group I lectured to in the University of Sri Lanka, Peradeniya, in 1973. She was an outstanding student who achieved high grades in her examinations. She graduated with flying colours after a 4 year course. +
++ After 1973, although I did not have any contact with her group, there were a few from her group, including Jegatha, who became family friends. I remember well the time when the halls of residence closed and she stayed with us at our University quarters for a short time. She was like a family member, helping out with household work, cooking, looking after our daughter etc. She was well loved by our family members. +
++ When we left Peradeniya in 1980, we lost contact with her and wondered where she was living. +
++ In 2020, I had a call from a person who asked me to guess who was calling, but I couldn't guess who it was. When she said she was Jegatha, calling from London, it was a pleasant surprise and we were so happy to speak to her after such a long time. This was possible because of Mr Tharmakumar's untiring efforts to locate her. +
++ From that point onwards she had been in contact with my wife and me on a regular basis. She shared many useful posts on WhatsApp and wished us on our birthdays. It was like being reunited with a lost sister. The void left by her demise is very sad and we miss her very much. +
++ Once again, we extend our heartfelt sympathies to her family members and pray for her soul to rest in eternal peace. +
++ Dr. C Yogachandran & Raji Akka +
+அன்பு மறவா நண்பி
+Amie inoubliable
+An unforgettable friend
+
+ முன்னாள் பீடாதிபதி, கலை கலாச்சார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
+ Ancienne doyenne, Faculté des Arts et de la Culture
Université de l'Est, Sri Lanka
+ Former Dean, Faculty of Arts & Culture
Eastern University, Sri Lanka
+
மறைவு துயரமானது. ஆனால் நினைவு அழியாதது
+"குடும்பை தனித் தொழியப் புட்பறந்தற்றோ
உடம்போடு உயிரிடை நட்பு".
பருவம் வந்தும் முட்டைக்கோது தனியே கிடக்க அதுள் இருந்து பறவை பறந்து போவதைப் போன்றதே உயிருக்கும் உடலுக்கும் உள்ள நட்பு – என்று கூறும் வள்ளுவர் வாக்கையே உலகு தோன்றிய காலம் முதல் அனைத்து உயிரினங்களும் அனுபவித்துக் கொண்டு வருகின்றன. ஆயினும் நினைவுகள் மறக்கப்படுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
+அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த பாசமுள்ள நண்பியே! நீ சொந்தங்கள் பந்தங்களை விட்டு திடீரென்று மறைந்த செய்தி எங்கள் உள்ளங்களில் சொல்ல முடியாத சோகத்தை நிறைத்துவிட்டதே. இறைபதம் சேர்ந்த எனது அன்பு நண்பி ஜெகா பாசமுடனும், பண்புடனும், அன்புடனும், உள்ளம் நிறைந்த உண்மையுடனும், நட்புறவுடன் பழகுபவராகவும், உதவி வேண்டுவோருக்கு இயன்ற உதவிகள் புரிபவராகவும், மிகவும் மென்மையான சுபாவம் உள்ளவராகவும் இருந்தை அவருடன் பழகிய காலத்திலிருந்து என்னால் உணர முடிந்தது.
+எமது பாசப் பிணைப்பு 1972ம் ஆண்டு இலங்கைக் குடியரசு தினத்தன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சங்கமித்தா விடுதியில் ஆரம்பமானது. அன்று ஆரம்பமான பிணைப்பு ஒரே இடத்தில் 1976 வரை ஒன்றாக இருக்கக் கிடைத்தது. இங்கு 12 மாணவிகள் ஒன்று சேர்ந்து தோழிகளானோம். ஆடிப்பாடி உல்லாசமாகக் காலத்தைக் கடத்தினோம். கொய்யாமர கொப்புகளில் ஏறி கொய்யாக்காய் பிடுங்குவது, மதியச் சாப்பாடு பிடிக்காவிட்டால் கண்டிக்குப் போய் குறைந்த செலவில் ஹோட்டலில் சாப்பிடுவது, Hostel இல் இருந்து வசந்தமாளிகை படம் பார்க்க காலையில் கண்டிக்குச் சென்று Ticket கிடைக்காததால் இரவு வரை காத்திருந்து படம் பார்த்து விட்டு விடுதிக்குத் திரும்பி வந்து விடுதி அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாமல் தடுமாறியது, சிவனொளிபாத மலையேறி பட்ட சிரமங்கள், சுற்றுலாக்களின் போது செய்த குறும்புகள் — இவற்றையெல்லாம் மீட்டுப் பார்க்கின்றேன். பசுமை நிறைந்த நினைவுகளோடு பாடித்திரிந்த பறவைகளாக வாழ்ந்தோம். பட்டப்படிப்பு முடித்த பின்னர் ஜெகாவும் நானும் உதவி விரிவுரையாளர்களாக 2 வருடங்கள் கடமையாற்றும் பாக்கியம் கிடைத்தது. பின்னர் வேறு வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றோம்.
+முத்துப் பல்லழகி ஜெகா புள்ளிவிபரத் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தபோது தன் சேவையில் கடமை, கண்ணியம், கடப்பாடு போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்த காரணத்தினால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றார். ஜெகா தன் வாழ்க்கையை பிறர் மதிக்கத்தக்க வகையிலும், சமூகத்திற்கு பயன் தரும் வகையிலும் வாழ்ந்து காட்டியவர் என்றால் மிகையாகாது. பள்ளிப் பருவம் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை தன்னுடைய பேச்சுத் திறமையினால் பதக்கங்கள் பல பெற்று சாதனை படைத்தார்.
+கொழும்பு புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து மட்டக்களப்புக்கு கடமையின் நிமித்தம் வருகை தந்த போது எமது வீட்டிற்கும் வருகை தரத் தவறவில்லை. இவர்களுடைய குடும்பம் (அம்மா, சகோதரிகள்) என்னுடன் தொடர்புகளை கொண்டிருந்ததால் குடும்ப நண்பியாகவே மாறி விட்டோம்.
+திருமணத்தின் பின்னர் நாட்டின் சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்றதால் எமது தொடர்பு சற்றுக் குறைந்திருந்தாலும் அண்மைக் காலமாக ஒவ்வொரு நாளும் காலையில் WhatsApp மூலம் ஆழமான கருத்துக்கள் பொதிந்த good morning, இரவில் மொபைல் ஃபோனில் நீண்ட நேர உரையாடல் சுகவீனமுற்ற பின்பும் தொடர்ந்தது. கடைசியாக அவர் வைத்தியசாலையில் இருந்த போது இரண்டு முறை மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டார். ஒருமுறை video call எடுத்தார். மனம் விட்டு பலவையும் பத்தையும் மனம் விட்டுக் கதைத்தார். இந்த சந்தர்ப்பங்களை என்னால் மறக்கவே முடியுதில்லை. இவ்வுரையாடலை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி.
+நல்ல பண்புடைய ஒருவருக்கு நல்ல மனமுடைய ஒருவர் கிடைப்பார். அந்த நல்ல மனமுடைய திருமிகு செல்வராசா அவர்கள் கணவராக வாய்த்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தனர்.
+"பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற".
அறிவில் சிறந்த நன்மக்களை விட இல் வாழ்க்கையில் சிறந்த பேறு எதுவும் இல்லை. இவ்வாறான நற் பெயர்களைப் பெற்று பெருமை பூத்த பெருமகள் நண்பி ஜெகா. இவரது மகள்மார்களான அஸ்வினி, சிவாஜினி இதற்கு எடுத்துக்காட்டு.
+"நல்லவர்களுக்கு மரணமில்லை". அவர்களின் இயற்கை மரணம் தான் அவர் பிறந்த தினம் — வயது எல்லையே இல்லை. அவர்கள் என்றும் சிரஞ்சீவிகளாக வாழ்ந்து வழி காட்டியாக இருப்பார்கள்.
+மரணத்தால் மனிதன் மடிந்து போவதில்லை. அவரது உயர்ந்த குணங்களால் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். நண்பி ஜெகாவும் எம்மோடு எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
+அமரர் ஜெகா அவர்களின் கணவருக்கும், பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல மன பலத்தைக் கொடுத்து தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற இறையருள் புரிய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
+"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்".
மறைவு துயரமானது. ஆனால் நினைவு அழியாதது. என்றென்றும் உங்கள் நினைவுகள் எங்களோடு தொடர்ந்து வரும். எங்கள் நினைவுகளில் என்றும் நீங்காது நிறைந்து நிற்பீர்கள்.
+ +
+ அன்பு மறவா நண்பி
+ கலாநிதி சிவக்கொழுந்து பொன்னையா
+ முன்னாள் பீடாதிபதி, கலை கலாச்சார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
+
Friend • Australia
+A beautiful lady with a beautiful soul. Always very cheerful and loves to chat. I cherish every moment of her conversation.
+The universe whispered to her that she no longer has to suffer and waiting to embrace her in the heavenly garden. Our lovable Jega attained peace however the grieving daughters and husband are in a terrible loss and feels empty and devastated.
+Kumu and family humbly extend our heartfelt condolences to her family. May the almighty give strength and courage to the family to move forward our love and prayers.
+My dearest Jega I write this note to your family with heavy heart and grief of your sudden loss.
+Om Shanthi
+Une belle dame avec une belle âme. Toujours très joyeuse et adorant discuter. Je chéris chaque instant de nos conversations.
+L'univers lui a murmuré qu'elle n'avait plus à souffrir, et l'attendait pour l'accueillir dans le jardin céleste. Notre chère Jega a trouvé la paix, mais ses filles et son mari, dans leur deuil, ressentent un vide immense et une douleur profonde.
+Kumu et sa famille présentent humblement leurs sincères condoléances à la famille. Que le Tout-Puissant donne force et courage à la famille pour avancer — notre amour et nos prières vous accompagnent.
+Ma très chère Jega, c'est avec un cœur lourd et un immense chagrin que j'écris ces mots à ta famille, après ta perte soudaine.
+Om Shanthi
+
+ Kumuthini Waman-Pillay
+ Australia
+
Roommate 4 years • United Kingdom
Colocataire 4 ans • Royaume-Uni
++ My roommate for 4 years in University of Peradeniya Srilanka. The first time I met Jegatha in May 1972 at Sangamitta hall of residence when we were both waiting in a queue. When our turn came, the warden asked us whether we would like to share the same room and be roommates? Both of us looked at each other and said ok and we continued that tradition for 4 years in the university. +
++ She always enthusiastic about everything and I am just the opposite, however, we always followed each other in fashion (same hairstyle). The other students asked us whether we are sisters. +
++ Both of us got our degrees and went on different directions. We lost contact with each other for nearly forty years. The determination of Sugendra Tharmakumar finally located your whereabouts and then we chatted regularly through WhatsApp. Last time I talked to you was in November 2025 and didn't realise that this will be our last. +
++ Luckily for me you've left me a voice message which I still have so I can hear your voice again and again. Now for your lovely daughters both suffering an immense loss, dear daughters Ashwani and Sivajina your momma will always stay with you and look after you like a guardian angel over you. +
+
+ Albert Einstein once said:
+ "Our death is not an end if we can live on our children for they are us, our bodies are only wilted leaves on the tree of life".
+ She who is not forgotten is not dead.
+
+ Rest in peace dear friend. Always missed but not forgotten until we meet again. +
+
+ Niranjana Manickavasagar
+ United Kingdom
+
Batchmate • United Kingdom
++ Yes, she was an angel, elegant and beautiful. Flying butterfly in our campus. Very hardworking and enthusiastic person. She was proud of higher job. Successful married life and lovely two daughters. +
++ Joined with batchmates in 2020. Enjoy with them and chatting with them. Sharing their thoughts and experiences. I was only able to join with them in middle of 2025. We had a memorable chat and was so happy but very sad that we cannot do it anymore. +
++ You are certainly in a peaceful place with no pain. Loving memories will live on forever. May her beautiful Soul Rest in Peace. +
++ Om Shanthi +
+
+ Yours loving batchmate
+ Manohary
+ United Kingdom
+
அஞ்சலிக்கவிதை
+Poème d'hommage
+Tribute Poem
+
+ அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு
+ அவரது பல்கலைக்கழக தோழர்களால் சமர்ப்பிக்கும் அஞ்சலிக்கவிதை
+
இலங்கை ஜனநாயக குடியரசில்(1972) பல ஊர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல்
+கலைப்பிரிவு மாணவர்களாய் அறிமுகமாகிய காலமது
+புதிய உலகத்தில் புகுந்தது போல பட்டாம் பூச்சியாய் பறக்கும் வயதில்
+பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற வாழ்வு
+ஆண் பெண் நண்பர்களாகி அறிமுகமாகிய காலமது
+அந்த வரிசையில் அழகால் நிரம்பி அமைதியாய் வலம் வரும் ஜெகதா
+முத்துப்பல் சிரிப்போடு முழுமதியாய் பாசத்துடன் பழகி
+படிப்பினிலே சுட்டியாய் பாவையவள் தோழிகளுடன் குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் காட்சி கண்கொள்ளா காட்சியன்றோ
+ + + +வெவ்வேறு ஊர்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள்
+அவை எல்லாம் கலந்த ஓர் கலாச்சார வாழ்வு
+பல்கலைக்கழகம் தந்த வாழ்வு பாசமாய் பழகினாய்
+பல்வேறு கதைகள் சொல்லி மகிழ்ந்தாய்
+நாம் சென்ற சுற்றுலா முழுவதிலும் கலந்து சிறப்பித்து மகிழ்ந்தாய்
+ + + +காலம் கனிந்து வர அவரவர் கற்கைநெறி
+மூன்றோ நாலோ ஆண்டுகள் முடிய பிரிந்து சென்ற காட்சி
+கண்முன்னே விரிய மீண்டும் சந்திப்போம் என்ற வாக்குறிதி காற்றில் பறந்ததோ
+தகுதிக்கு ஏற்ப அரசபதவிகள் அவரவர் வாழ்க்கையில் அமைந்த வேளையில்
+திருமணபந்தம் பலருக்கு வாய்த்திட நாட்டுப் பிரச்சினை நாளலெல்லாம் தொடர
+நாட்டைவிட்டு வெளியேறியோரில் நாமும் அடங்குவோம்
+ + + +புலத்திலிலும் நிலத்திலும் வாழ்கின்ற யூனிமேற்றை நீண்டகாலத்தின் பின்
+ஒருங்கிணைத்து பேச உபாயம் தேடிய சுகேந்திரா குமார் தம்பதிகளுக்கு
+நன்றி கூறி புலத்திலும் நிலத்திலும் வாழ்கின்றவர்களோடு பேசி மகிழ வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியே, அந்த வகையில் அமரர் ஜெகதாவோடு பேசி மகிழ்ந்தோம்
+ + + +இன்று அவரது இறுதி நிகழ்வில்
+இதயம் நிறைந்த துயரங்களோடு அவரது குடும்பத்தினருக்கு
+நண்பர்களாகிய எங்கள் அனுதாபங்கள்
++ ஆயிரம் ஆயிரம் ஆயிரம் +
++ ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி +
+நெருங்கிய நண்பர் • Colombo
+Ami proche • Colombo
+Close Friend • Colombo
++ ✍️ அவரது விரிவான பங்களிப்பு விரைவில் வரும்... + ✍️ Sa contribution détaillée arrive bientôt... + ✍️ His full contribution coming soon... +
++ — கண்ணதாசன் — +
+ +
+ போனால் போகட்டும் போடா;
+ இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
+ போனால் போகட்டும் போடா.
+
+ வந்தது தெரியும் போவது எங்கே
+ வாசல் நமக்கே தெரியாது!
+ வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
+ இந்த மண்ணில் நமக்கே இடமேது?
+
+ வாழ்க்கை என்பது வியாபாரம்;
+ வரும் ஜனனம் என்பது வரவாகும்;
+ அதில் மரணம் என்பது செலவாகும்
+ போனால் போகட்டும் போடா.
+
+ இரவல் தந்தவன் கேட்கின்றான்;
+ அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
+ உறவைச் சொல்லி அழுவதனாலே
+ உயிரை மீண்டும் தருவானா?
+
+ கூக்குரலாலே கிடைக்காது;
+ இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது;
+ அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
+ போனால் போகட்டும் போடா.
+
+ ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி +
+குடும்ப பாரம்பரியமும் குலதெய்வமும்
+ + +
+ உலகம் பரவி வாழும் எமது குடும்பத்தினருக்கு
+ எமது பாரம்பரியத்தையும் மரபுகளையும்
+ அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும்
+ ஒரு சிறு முயற்சி
+
+ கொக்குவில் தட்டார் பாரம்பரியம்
+ ஜெகபாக்கிய குடும்பம்
+
+ எமது குடும்பத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கும் முன், விநாயகரை வணங்கிய பின், "ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று சொல்லி விராட் விஸ்வபிரமரை வணங்குவது எமது மரபு. இது ஏன் என்பதை இன்றைய உலகம் பரவி வாழும் எமது குடும்பத்தினர் அறிந்திருப்பது முக்கியம். +
++ விஸ்வபிரமர் என்பவர் பிரபஞ்சத்தின் தெய்வீக சிற்பியும், கட்டடக் கலைஞரும் ஆவார். "விராட்" என்றால் பிரம்மாண்டமானவர், "விஸ்வ" என்றால் பிரபஞ்சம், "பிரம்மா" என்றால் படைப்பாளி. ஆக விராட் விஸ்வபிரமர் என்றால் "பிரபஞ்சப் படைப்பின் விரிவான கட்டமைப்பாளர்" என்று பொருள். +
++ புராணங்களின்படி, விஸ்வபிரமர் பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர். இவர் தேவர்களுக்கான அரண்மனைகள், ஆயுதங்கள், ஆபரணங்கள் அனைத்தையும் படைத்தவர். இந்திரனின் வஜ்ராயுதம், குபேரனின் புஷ்பக விமானம், சிவபெருமானின் திரிசூலம் - இவையனைத்தும் விஸ்வபிரமரின் கைவண்ணம். +
++ புராணக் கதையின்படி, ஒரு முறை விராட் விஸ்வபிரமர் ஒரு மகா யாகம் செய்தார். உலகிற்கு கைவினைக் கலைகளை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செய்த இந்த யாகக் குண்டத்திலிருந்து ஐந்து பேர் தோன்றினார்கள். +
+
+ யாக அக்கினியிலிருந்து பிறந்த ஐவர் -
+ கைவினைக் கலைகளின் தெய்வீக மூலம்
+
+ இந்தக் கதையின் ஆழ்ந்த பொருள்: கைவினைக் கலைகள் சாதாரண தொழில்கள் அல்ல - அவை தெய்வீக தோற்றம் கொண்டவை. யாகத்திலிருந்து பிறந்தவை என்றால், அவை ஒழுங்குமுறை, சடங்கு, புனிதத்தன்மை, சமூக நன்மை ஆகியவற்றின் அடையாளங்கள். +
++ யாகக் குண்டத்திலிருந்து தோன்றிய ஐந்து பேரும், ஐந்து வெவ்வேறு கைவினைக் கலைகளை உலகிற்கு அளித்தனர். இவர்களே "பஞ்ச விஸ்வகர்மர்கள்" அல்லது "பஞ்சகம்மாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். +
+1. விசுவகர்மா
+கட்டடக் கலைஞர், பொறியாளர்
+2. கருச்சன்
+தச்சு, மர வேலைக்காரர்
+3. லோகர்
+உலோக வேலைக்காரர் (கொல்லர்)
+4. கனகர் / தட்டார் ⭐
+பொன்-வெள்ளி வேலை
+எமது குடும்பப் பாரம்பரியம்
+5. குயிலர்
+கல் செதுக்கல், சிற்பி
++ இந்த ஐந்து கலைகளும் யாகத்திலிருந்து பிறந்தவை என்பதன் அர்த்தம்: கைவினை என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு தெய்வீக வரம். தங்கத்தை வடிவமைக்கும் கைகள், மரத்தைச் செதுக்கும் கைகள், கல்லை உயிர்ப்பிக்கும் கைகள் - இவையெல்லாம் விஸ்வபிரமரின் ஆசியுடன் செயல்படுகின்றன. +
++ ஆகையால் எமது முன்னோர்கள் ஒவ்வொரு வேலையையும் ஆரம்பிக்கும் முன் "ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று சொல்லி, தங்களுடைய கைகளில் தெய்வீக சக்தி இருக்கிறது என்பதை நினைவில் கொண்டனர். +
++ எமது ஜெகபாக்கிய குடும்பம், யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த பொன்னாபரண கைவினை மரபைச் சேர்ந்தது. தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வளர்ந்த ஒரு சிறப்பு கலை மரபின் வாரிசுகள் நாங்கள். +
++ கொக்குவில் என்பது, ஈழநாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பிரதேசமாகும். பண்டைய காலங்களில் இப்பகுதி நீர்வளம் செழித்து, பசுமையான சோலைகளால் சூழப்பட்டிருந்தது. +
++ அந்தச் சோலைகளிலும் குளத்தங்கரைகளிலும் கொக்கு இனப் பறவைகள் அதிகமாகக் காணப்பட்டதால், இப்பகுதி "கொக்குவில்" என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. கொக்குகள் கூடு கட்டும் இடம் என்ற பொருளும் இதற்கு உண்டு. +
++ தலையாழி குளம் அருகிலும், ஞானவைரவர் கோயில் சுற்றியுள்ள பகுதிகளிலும், தங்க வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற ஊராக கொக்குவில் விளங்கியது. +
++ "கரம்பொன்" என்பது "தங்கக் கை" என்ற பொருளை உடைய சொல். கொக்குவிலில் தங்க வேலைப்பாடுகளில் ஈடுபட்ட கைவினைஞர்கள், தலைமுறை தலைமுறையாக இந்தக் கலையை வளர்த்த வம்சத்தவர்கள். +
++ எமது தாயார் எமது தகப்பன், "கரம்பன்" வாசியை மணம் செய்ததன் மூலம், தலைமுறைகள் கடந்தும் தொடரும் இக் கைவினை மரபு எமது குடும்பத்தில் வேரூன்றியது. முன்னோர் காலத்தில் ஆச்சாரத்துடனும், ஒழுக்கத்துடனும் இந்தக் கலையைப் பாதுகாத்து வளர்த்ததினால், அவர்கள் "ஆச்சாரிகள்", "வித்துவான்கள்" என சமூகத்தில் உயர்ந்து போற்றப்பட்டனர். +
++ குழல்சங்கு ஒலிக்கும் சாலைகளிலும், தீச்சுடர் கக்கும் தொழிற்சாலைகளிலும், இலங்கைத் தீவின் தங்க இதயமாக கொக்குவில் துடித்தது. +
++ எமது பெற்றோர்களான ஜெகராஜா மற்றும் பாக்கியலட்சுமி அவர்கள், இந்தப் பெருமைமிக்க மரபின் உண்மையான வாரிசுகள். +
++ அவர்கள் தங்களுடைய கைகளால் தங்கத்திற்கு உயிர் கொடுத்தவர்கள். தங்கத்தை வடிவமாக்கி, அழகாக மாற்றும் கற்பனை மற்றும் திறமை கொண்டவர்கள். வரலாற்றை உருவாக்கிய வல்லமையான கைகள் அவர்களுடையவை. +
++ அந்தக் கைகளில் தான் எமது குடும்பத்தின் பெருமையும், மரபும், மரியாதையும் பதிந்துள்ளது. +
++ தட்டார் மரபினருக்கு விஸ்வபிரமர் குலதெய்வமாக வணங்கப்படுகிறார். ஏனெனில் விஸ்வபிரமரே தேவர்களுக்கு ஆபரணங்கள் செய்த முதல் பொற்கொல்லர். இந்திரனின் கிரீடம், மகாலட்சுமியின் ஆபரணங்கள் - அனைத்தும் விஸ்வபிரமரின் கைவண்ணம். +
++ ஆகையால், எந்த ஒரு புதிய வேலையை ஆரம்பிக்கும் முன்பும், எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்யும் முன்பும், "ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று எமது குலதெய்வத்தை வணங்குவது எமது மரபு. +
++ இன்று எமது குடும்பம் உலகம் பரவி வாழ்கிறது - இலங்கை, நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து என பல நாடுகளில். பல மொழிகள் கற்று, பல கலாச்சாரங்களுடன் கலந்துவிட்டோம். இது நல்லதே. +
++ ஆனால் எமது வேர்களை மறந்துவிடக் கூடாது. அடுத்த தலைமுறை குழந்தைகள் "ஏன் நாம் விஸ்வபிரமரை வணங்குகிறோம்?" என்று கேட்கும்போது, நாம் பதில் சொல்ல வேண்டும். +
+
+ "பாரம்பரியம் என்பது
+ சாம்பலைப் பாதுகாத்தல் அல்ல,
+ நெருப்பை எடுத்துச் செல்லல்"
+
+ விராட் விஸ்வபிரமனிடமிருந்து நமக்குக் கிடைத்த அந்த நெருப்பு -
+ கலையின் நெருப்பு, படைப்பின் நெருப்பு, ஞானத்தின் நெருப்பு -
+ அதை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
+
+ 1. குடும்ப வரலாறு ஆவணப்படுத்துதல்
+ மூத்தவர்களிடம் கேட்டு எழுதுங்கள், பழைய புகைப்படங்களை பாதுகாத்து வைக்கவும்
+
+ 2. விநாயகர் வணக்கம் + விஸ்வபிரமர் வணக்கம்
+ "ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ" என்று சொல்லிக் கொடுங்கள்
+
+ 3. குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்
+ கொக்குவில், கரம்பன், தட்டார் பாரம்பரியத்தைப் பற்றி சொல்லுங்கள்
+
+ 4. பாரம்பரியத்தை நவீனமயமாக்குங்கள்
+ பழைய கலைகளை புதிய வழிகளில் தொடருங்கள்
+
+ எமது கைகள் தங்கத்தை வடிவமைத்தன
+ எமது மனங்கள் கலையை உருவாக்கின
+ எமது குலதெய்வம் விஸ்வபிரமர்
+ எமது பாரம்பரியம் கொக்குவில் கரம்பன்
+
+ இதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது எமது கடமை +
++ ஓம் விராட் விஸ்வபிரமனே நமஹ +
+ +
+ கொக்குவில் சுடர் - தலையாழித் தங்கம்
+ ஜெகபாக்கிய குடும்பம்
+ என்றென்றும் வாழ்க
+
+ 👴👵 ஜெகராஜா & பாக்கியலட்சுமி +
++ கொக்குவில் • தலையாழி +
++ ✨ நவமணிகள் ✨ +
+ + +
+ 🌟
+ இந்த நினைவு மலர் அர்ப்பணிக்கப்பட்டது
+ Ce livre commémoratif est dédié à
+ This memorial book is dedicated to
+
+ ஜெகதாம்பாள் செல்வராஜா கந்தசாமி
+ (1953 - 2026)
+
+
+ தலையாழியின் தங்கம் • கொக்குவிலின் சுடர்
+
+